ஈரானின் அதியுயர் தலைவர்
ஈரானின் அதியுயர் தலைவர் (Supreme Leader of Iran) ஈரான் இசுலாமியக் குடியரசின் இறுதி அதிகாரம் படைத்தவர் ஆவார். இரான் இசுலாமியக் குடியரசின் ஆன்மீகம், அரசியல் நிர்வாகம், நீதி நிர்வாகம், பொருளாதாரம், பொதுத் தேர்தல், வெளியுறவு விவகாரம், கல்வி, இராணுவம் போன்றவற்றில் இவரது முடிவே இறுதியானதாகும். மேலும் ஈரான் நாட்டின் அதிக அதிகாரம் படைத்த முக்கிய அமைப்புகளான இரான் அரசு[2][3][4][5][6][7][8][9][10][11] மேலும் இவருக்கு ஈரானி அதிபரையும், அவரது அமைச்சரவையும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் படைத்தவர்.[12] வல்லுநர்கள் மன்றம் மற்றும் பாதுகாவலர்கள் மன்றம் (ஈரான்) இவரது மேற்பார்வையில் செயல்படும். ஈரான் அரசின் அமைச்சரவை உறுப்பினர்கள் இவரது ஆலோசனைப்படி நியமிக்கப்படுவர்.
the ஈரான் இசுலாமியக் குடியரசு ஈரானின் அதியுயர் தலைவர் | |
---|---|
அதியுயர் தலைவர் அலுவலகம் | |
பதவி | ஈரான் அரசின் தலைவர் |
அறிக்கைகள் | வல்லுநர்கள் மன்றம் (ஈரான்) |
அலுவலகம் | தெகுரான் |
நியமிப்பவர் | வல்லுநர்கள் மன்றம் |
பதவிக் காலம் | வாழ்நாள் முழுவதும்[1] |
அரசமைப்புக் கருவி | ஈரானிய அரசியலமைப்புச் சட்டம் |
உருவாக்கம் | 3 டிசம்பர் 1979 |
முதலாமவர் | ரூகொல்லா கொமெய்னி |
இணையதளம் | www.leader.ir |
ஈரானின் அரசியலமைப்புச் சட்டப்படி, இசுலாமிய நீதிபரிபாலான பாதுகாவலராக, ஈரானின் அதியுயர் தலைவர் பதவி 1979-இல் உருவாக்கப்பட்டது.[13] அரசியலமைப்புச் சட்டப்படி, ஈரான் இசுலாமியக் குடியரசின் அதிகாரங்கள் நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறையால் நிர்வகிக்கப்பட்டாலும் அவைகளை மேற்பார்வையிட்டு தலையிடவும் ஈரானின் அதியுயர் தலைவருக்கு உண்டு.[14]
குடியரசுத் தலைவரை விட அதிக அதிகாரம் படைத்த தலைமை மதகுருவான ஈரானின் அதியுயர் தலைவர் குடியரசுத் தலைவர், முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்.[15] ஈரானிய அரசியலமைப்புச் சட்டப்படி, ஈரானின் அதியுயர் தலைவர் முழு இசுலாமிய அறிஞராகவும், சியா இசுலாம் மத குருவாகவும் இருத்தல் வேண்டும்.
ஈரானின் அதியுயர் தலைவர்கள்
தொகுஈரானின் அதியுயர் தலைவரை வல்லுநர் மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். அதியுயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தம் வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் தொடரலாம். இவரை ஈரானின் எந்த ஒரு அரசியல் அமைப்பும், நீதித்துறையும் கேள்வி கேட்க இயலாது.[16][17]
- ரூகொல்லா கொமெய்னி - (1979 - 1989 முடிய) முதலாவது ஈரானிய அதியுயர் தலைவர்
- அலி காமெனி - (1989 முதல் - தற்போது வரை) இரண்டாவது ஈரானிய அதியுயர் தலைவர்
பணிகள், அதிகாரங்கள் மற்றும் கடமைகள்
தொகுஅரசியலமைப்பு, ஆணைகள் மற்றும் பிற சட்டங்களால் உச்ச தலைவருக்கு வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் அதிகாரங்கள்:
- ஈரான் இஸ்லாமிய குடியரசின் பொதுக் கொள்கைகளை தேசத்தின் அனுபவம் மற்றும் அறிஞர்கள் மன்றத்துடன் கலந்தாலோசித்து வரையறுத்தல்.
- அமைப்புகளின் பொதுவான கொள்கைகளை முறையாக செயல்படுத்துவதற்கான மேற்பார்வை.
- அரசாங்கத்தின் மூன்று கிளைகளுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பது
- தேசிய வாக்கெடுப்புக்காக ஆணைகளை வழங்குதல்.
- ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைக் கட்டளை அதிகாரியாக பணிபாற்றுதல்.
- போர் மற்றும் சமாதான பிரகடனம், மற்றும் ஆயுதப்படைகளை அணிதிரட்டுதல்.
- பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்தல்
- பதவி விலகம், பதவி நியமனம், பதவி நீக்கம் ஆகியவைகளை ஏற்றுக்கொள்ளல்:
- தேசய அனுபவம் மற்றும் அறிஞர்கள் மன்ற உறுப்பினர்கள்.
- கலாச்சார புரட்சியின் உச்சக் குழு உறுப்பினர்கள்.
- உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில்க்கு இரண்டு தனிப்பட்ட பிரதிநிதிகள் நியமித்தல்
- அரசின் அனைத்து கிளை அமைப்புகளுக்கும் பிரதிநிதிகளை நியமிக்க முடியும்.
- பாதுகாவலர் மன்றத்திற்கு 6 உறுப்பினர்களை நியமித்தல்.
- ஈரானின் தலைமை நீதிபதியை நியமித்தல்
- பாதுகாப்பு, உளவுத்துறை, வெளியுறவு மற்றும் அறிவியல் அமைச்சர்களை நியமித்தல்
- ஈரான் இஸ்லாமிய குடியரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நெட்வொர்க் தலைவர்.
- ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படைகளின் தலைமை தலைவர்களை நியமித்தல்
- அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து மீண்டும் பணியமர்த்த முடியும்.
- ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் அவர்களின் உறவுகளை ஒழுங்குபடுத்துதல்.
- வழக்கமான முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை தேசத்தின் செயல்திறன் விவேகக் கவுன்சில் மூலம் தீர்க்கலாம்.
- ஈரான் குடியரசுக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை முறைப்படுத்தும் ஆணையில் கையெழுத்திடுதல்.
- ஈரான் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வது.
- தேசிய தலைமைப் பாதுகாப்புக் குழுவின் முடிவுகளை உறுதிப்படுத்துதல்.
இதனையும் காண்க
தொகு- பகலவி வம்சம்
- முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
- ஈரானியப் புரட்சி
- வல்லுநர்கள் மன்றம் (ஈரான்)
- ரூகொல்லா கொமெய்னி - ஈரானின் முதலாவது அதியுயர் தலைவர்
- அலி காமெனி - ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவர்
- அசன் ரவ்கானி
- மகுமூத் அகமதிநெச்சாத்
- இப்ராகிம் ரைசி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iran's possible next Supreme Leader being examined: Rafsanjani". Reuters. 13 December 2015. https://www.reuters.com/article/us-iran-election-leader-idUSKBN0TW0OV20151213.
- ↑ "Iran's Khamenei hits out at Rafsanjani in rare public rebuke". Middle East Eye.
- ↑ "Khamenei says Iran must go green - Al-Monitor: the Pulse of the Middle East". Al-Monitor. Archived from the original on 2015-12-22.
- ↑ Louis Charbonneau and Parisa Hafezi (16 May 2014). "Exclusive: Iran pursues ballistic missile work, complicating nuclear talks". Reuters.
- ↑ "IranWire - Asking for a Miracle: Khamenei's Economic Plan". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
- ↑ "PressTV-'Economic issues, Iran's foremost problem'". Archived from the original on 2016-08-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
- ↑ kjenson (22 May 2014). "Khamenei outlines 14-point plan to increase population". Archived from the original on 1 August 2017.
- ↑ "Iran: Executive, legislative branch officials endorse privatization plan". www.payvand.com. Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
- ↑ "Khamenei slams Rouhani as Iran's regime adopted UN education agenda". 8 May 2017. Archived from the original on 31 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Al-awsat, Asharq (25 September 2017). "Khamenei Orders New Supervisory Body to Curtail Government - ASHARQ AL-AWSAT English Archive". Archived from the original on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Leader outlines elections guidelines, calls for transparency". 15 October 2016.
- ↑ "BBC NEWS - Middle East - Iranian vice-president 'sacked'". 2009-07-25. http://news.bbc.co.uk/2/hi/middle_east/8168202.stm.
- ↑ Article 5, Iranian Constitution
- ↑ Constitution of Iran Unofficial English translation hosted at University of Berne
- ↑ "Who's in Charge?" by Ervand Abrahamian London Review of Books, 6 November 2008
- ↑ Reuters (14 December 2015). "Rafsanjani breaks taboo over selection of Iran's next supreme leader". பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Everything you need to know about Iran's Assembly of Experts election". பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
வெளி இணைப்புகள்
தொகு