பாதுகாவலர்கள் மன்றம் (ஈரான்)
பாதுகாவலர்கள் மன்றம் அல்லது அரசியலமைப்புக் குழு (Guardian Council or Constitutional Council) (பாரசீக மொழி: شورای نگهبان, romanized: Shūrā-ye Negahbān)[2][3]ஈரான் இசுலாமியக் குடியரசில் கணிசமான அதிகாரத்தையும், செல்வாக்கையும் செலுத்தும் ஒரு நியமிக்கப்பட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இது ஈரானின் அரசியலமைப்பு நீதிமன்றமாகச் செயல்படும். இக்குழு ஒரு செயலர் தலைமையில் செயல்படும்.
பாதுகாவலர்கள் மன்றம் | |
---|---|
வகை | |
வகை |
|
தலைமை | |
செயலாளர் | அகமது ஜன்னதி 17 சூலை 1992 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 12 |
அரசியல் குழுக்கள் | இசுலாமிய சமய அறிஞர்கள்:[1]
|
கூடும் இடம் | |
தெகுரான், ஈரான் | |
வலைத்தளம் | |
Official website |
ஈரானிய அரசியலமைப்பின் படி, இப்பாதுகாவலர்கள் குழுவின் 12 உறுப்பினர்களில் 6 பேர் இசுலாமியச் சமயச் சட்டங்களில் வல்லுராக இருத்தல் வேண்டும். இந்த 6 பேரை ஈரானின் அதியுயர் தலைவர் நியமிப்பார். இசுலாமியச் சமயச் சட்டம் தவிர பிற முக்கிய சட்டங்களின் நிபுனர்களாக உள்ள மீதி ஆறு நபர்களை நாடாளுமன்றத்தின் பரிந்துரையின் படி ஈரானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமிப்பார்.[4]
பாதுகாவலர்கள் மன்றம் என அழைக்கப்படும் அரசியலமைப்புக் குழுவின் முக்கியப் பணி, ஈரான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பின் நடைமுறையை விளக்குவதாகும்.[5] இம்மன்றத்தின் பிற முக்கியப் பணிகள் ஈரானின் பொதுத் தேர்தல்களை மேற்பார்வை செய்தல் மற்றும் வல்லுநர்கள் மன்றம், ஈரானின் குடியரசுத தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஒப்புதல் அளிக்கும்.[6] மேலும் இந்த மன்றம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள், ஈரானின் அரசியலமைச் சட்டப் பிரிவு 96 மற்றும் 94-இன் படி இசுலாமிய சமய நெறிப் படி உள்ளதா என்பதையும் ஆராயும்.[7]
இம்மன்றம் இசுலாமிய நெறிப்படி, ஈரானின் இசுலாமியச் சட்டங்கள் உள்ளதா என்பதை கீழ்கண்ட வழிகளில் விளக்கும்:
- ஈரானின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்கிறது.
- ஈரான் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான வேட்பாளர்களின் கண்காணிப்பை மேற்பார்வையிடுகிறது மற்றும் தேசிய அலுவலகத்தை யார் இயக்க முடியும் மற்றும் இயங்க முடியாது என்பதை தீர்மானிக்கிறது [8]
- சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களையும், மிகவும் பிரபலமானவர்களையும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு மறுக்கப்படுகிறது [9]
- தகுதி நீக்கம் (வீட்டோ) செய்யப்படாத சட்டங்கள் நாடாளுமன்றம் இயற்றுகிறதா என்பதை கண்காணிக்கும். [10][11]
- இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தாக்கம் ஈரான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டில் உள்ளதா என்பதை ஆராயும.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shaul, Bakhash (12 September 2011). "Iran's Conservatives: The Headstrong New Bloc". Frontline. PBS. பார்க்கப்பட்ட நாள் March 10, 2015.
- ↑ "GUARDIAN COUNCIL". Encyclopædia Iranica XI. (2003). New York, NY: Encyclopaedia Iranica Foundation. 379–382. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0933273711.
- ↑ "Council of Guardians | Definition, Role, Selection, & History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
- ↑ Inc., Manou & Associates. "Iranian Government Constitution, English Text". Archived from the original on 2011-06-17.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Article 98 of the constitution
- ↑ Article 99 of the constitution
- ↑ Articles 96 and 94 of the constitution.
- ↑ The Guardian Council Expands Power: Election Monitoring Boards, Arseh Sevom, Arseh Sevom, Feb 18, 2020. Retrieved February 24, 2020.
- ↑ https://www.atlanticcouncil.org/blogs/iransource/factbox-irans-2020-parliamentary-elections/, Arash Azizi, Atlantic Council, February 14, 2020. Retrieved February 24, 2020.
- ↑ Whose Iran?, Laura Secor, த நியூயார்க் டைம்ஸ், January 28, 2007. Retrieved September 22, 2008.
- ↑ Iran: Voices Struggling To Be Heard, U.S. Department of State Fact Sheet, April 9, 2004. Retrieved September 22, 2008.
வெளி இணைப்புகள்
தொகு