மோடெங் கணவாய்
மோடெங் கணவாய் (Moteng Pass) என்பது தென் ஆப்பிரிக்க எல்லைக்குள் அமைந்திருக்கும் லெசோத்தோ நாட்டின் மலோடி மலைகளில் 2820 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு செங்குத்தான கரடுமுரடான கணவாய் ஆகும்[1]. புத்தா-புத்தி நகரத்தை வைரச்சுரங்கம் உள்ள நகரமான மோக்காட்லாங்- நகருடன் இணைக்கும் இரு கணவாய்களுள் ஒன்று மோடெங் கணவாய் ஆகும். மற்றொரு கணவாய் மாக்லசீலா கணவாய் ஆகும் [2]. கடுமையான பனிப்பொழிவின் காரணமாக குளிர்காலங்களில் இக்கணவாய் பாதை அடிக்கடி மூடப்பட்டுவிடும். 7.9 கி.மீ,[3] நீளம் கொண்ட இக்கணவாயின் இறுதி பகுதி பனிக்கட்டியால் நிரம்பியிருப்பதால் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது.
மோடெங் கணவாய் | |
---|---|
மோடெங் கணவாயின் மேற்பகுதி | |
ஏற்றம் | 2,820 மீ (9,252 அடி) |
அமைவிடம் | லெசோத்தோ |
மலைத் தொடர் | மலோடி மலை |
படத்தொகுப்பு
தொகு-
மோடெங் கணவாய்
-
மோடெங் கணவாயில் பனி, 24 சூலை 2016
-
மோடெங் கணவாயில் பனி
மேற்கோள்கள்
தொகு- ↑ Road Sign Elevation Photo, Jaco van Tonder, 2006
- ↑ Map of Lesotho பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம், South and North Sheet, Lesotho Government, 1978
- ↑ Map of Lesotho, South and North Sheet, Lesotho Government, 1978