மோதி பாக் அரண்மனை

மோதி பாக் அரண்மனை (Moti Bagh Palace) (பஞ்சாபி: ਮੋਤੀ ਬਾਗ਼ ਮਹਲ, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவில் உள்ளது. உலகின் பெரிய குடியிருப்புகளில் ஒன்றான இவ்வரண்மனையில், பாட்டியாலா அரச குடும்பத்தினர் 1940ஆம் ஆண்டு வரை வாழ்ந்தனர். புது மோதி பாக் அரண்மனை கட்டிய பின், முன்னாள் பாட்டியால அரச குடும்பத்தினர்கள் அங்கு குடியேறிவிட்டனர்.

புது மோதி பாக் அரண்மனை
புது மோதி தோட்ட அரண்மனை, பட்டியாலா
பழைய மோதி பாக் அரண்மனை, வடக்கு மண்டல கலாச்சார மையத்தின் அமைவிடம்

பழைய மோதிபாக் அரண்மனை 1840இல் பாட்டியாலா மகாராஜாவால் கட்டப்பட்டு, மன்னர் பூபிந்தர் சிங்கால் 1920இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசு பழைய அரண்மனையை கையகப்படுத்தி, அதில் சில மாற்றங்கள் செய்து அரசு அருங்காட்சியகம், இறந்து பாடம் செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் காட்சிகூடம் மற்றும் வடக்கு மண்டல பண்பாட்டு மையம் அமைத்தது. இப்பழைய அரன்மணையின் கிழக்குப் பகுதியில் தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS) அமைந்துள்ளது. [1]மேலும் இங்கு ஆண்டு தோறும் பட்டியாலாவின் பாரம்பரிய விழாக்கள் நடைபெறுகிறது. புது மோதி அரண்மனையில் பட்டியாலாவின் முன்னாள் அரச குடும்பத்தினர் வாழ்கின்றனர்.

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "About us". National Institute of Sports. http://www.nsnis.org/about.htm. பார்த்த நாள்: 2014-08-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதி_பாக்_அரண்மனை&oldid=2107885" இருந்து மீள்விக்கப்பட்டது