மோனா சந்திரவதி குப்தா

மோனா சந்திரவதி குப்தா (Mona Chandravati Gupta-1896-1984) ஓர் பிரித்தானியப் பர்மாவில் பிறந்த இந்தியச் சமூக சேவகர், கல்வியாளர் மற்றும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற அமைப்பான நாரி சேவா சமிதியின் நிறுவனர் ஆவார்.[1]

மோனா சந்திரவதி குப்தா
பிறப்பு20 அக்டோபர் 1896
யங்கோன், பர்மா
இறப்பு30 திசம்பர் 1984
இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மறைமாவட்டக் கல்லூரி, கொல்கத்தா
பணிசமூக சேவகர், கல்வியாளர்
அறியப்படுவதுசமூக சேவை
விருதுகள்பத்மசிறீ
கைசார்-ஐ-இந்த்-பதக்கம்

வாழ்க்கை தொகு

குப்தா மியான்மாரின் தலைநகர் இரங்கூன், இன்றைய யங்கோனில் 20 அக்டோபர் 1896-இல் பிறந்தார். யங்கோன் மற்றும் இலண்டனில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு, கொல்கத்தாவில் உள்ள மறைமாவட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பைப் பெற்றார்.[2] கல்விப் பணியில் இவர் இலக்னோவிலுள்ள அரசு பெண்கள் கல்லூரியின் துணை முதல்வராகவும், பெண் கல்விக்கான பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]

குப்தா 1930-களில் இரண்டு பெண்கள் அமைப்புகளைத் தொடங்கினார். 1931-இல் ஜெனானா பார்க் லீக் மற்றும் 1936-இல் பெண்கள் சமூக சேவை லீக் தொடங்கினார்.[3] ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இவர் மகளிர் அகாதமியை நிறுவினார். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பிறகு, அகாதமி மகளிர் சமூக சேவை லீக்குடன் இணைக்கப்பட்டு நாரி சேவா சமிதியை உருவாக்கியது.[3] இந்த அமைப்பு தற்போது நான்கு கல்வி நிறுவனங்கள், பெண்களுக்கான இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள், மூன்று பெண்கள் நல மையங்கள், ஒரு கலாச்சார மையம் மற்றும் மருத்துவ வசதிகளை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது.[1]

குப்தா உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் இலக்னோ பல்கலைக்கழகத்தில் முறையே 1939 மற்றும் 1940-இல் பணியாற்றினார். 1939ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்திய நிர்வாகத்தின் கைசர்-இ-ஹிந்த் பதக்கத்தை வென்றவர்,[2] 1965ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு பத்மசிறீ விருது, இவரது பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[4]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Nari Sewa Samiti". Nari Sewa Samiti. 2015. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 May 2015.
  2. 2.0 2.1 2.2 "Yasni". Yasni. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 May 2015.
  3. 3.0 3.1 "NSN". NSN. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 May 2015.
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_சந்திரவதி_குப்தா&oldid=3897351" இலிருந்து மீள்விக்கப்பட்டது