மோனோ இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டு

வேதிச் சேர்மம்

மோனோ இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டு (Monostrontium ruthenate) என்பது SrRuO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஒற்றை இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. இசுட்ரோன்சியம் தனிமத்தின் அறியப்பட்ட இரண்டு ருத்தேனேட்டுகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று Sr2RuO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இரு இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டாகும். மோனோ இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டு இரும்பு காந்தவியல் பண்பைக் கொண்டிருக்கும்.[1] பெரும்பாலான அணைவு உலோக ஆக்சைடுகள் போல ABO3 என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய பெரோவுசிகைட்டு கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுக் கொள்கிறது.Ru4+ அயனிகள் எண்முகத்தளங்களையும் பெரிய Sr2+ அயனிகள் உருக்குலைந்த 12-ஒருங்கிணைப்பிலும் காணப்படுகின்றன.[2]

மோனோ இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம் ருத்தேனேட்டு
இனங்காட்டிகள்
12169-14-1 Y
பண்புகள்
O3RuSr
வாய்ப்பாட்டு எடை 236.69 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Koster, Gertjan; Klein, Lior; Siemons, Wolter; Rijnders, Guus; Dodge, J. Steven; Eom, Chang-Beom; Blank, Dave H. A.; Beasley, Malcolm R. (2012). "Structure, Physical Properties, and Applications of SrRuO3 Thin Films". Reviews of Modern Physics 84 (1): 253–298. doi:10.1103/RevModPhys.84.253. Bibcode: 2012RvMP...84..253K. https://research.utwente.nl/en/publications/structure-physical-properties-and-applications-of-srruo3-thin-films(1e2b4b92-c67d-4854-af92-6aab57227116).html. 
  2. Kobayashi, H.; Nagata, M.; Kanno, R.; Kawamoto, Y. (1994). "Structural characterization of the orthorhombic perovskites: [ARuO3 (A = Ca, Sr, la, Pr)]". Materials Research Bulletin 29 (12): 1271–1280. doi:10.1016/0025-5408(94)90151-1. https://archive.org/details/sim_materials-research-bulletin_1994-12_29_12/page/1271.