மோரே, இந்தியா

இந்திய நகரம்

மோரே (Moreh) மியான்மர் நாட்டின் எல்லைக்கருகில் அமைந்துள்ள இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் தேங்க்னோவ்பல் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமம் ஆகும். . இங்கு குகி மக்கள் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்களும், நேபாளிகளும், மெய்தெய் இன மக்களும் வாழ்கின்றனர். இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகங்களில் பெரும்பான்மை இவ்வூரிலேயே நடைபெறுகின்றன. இவ்வூர் தென்கிழக்காசியாவின் வாசல் என்றழைக்கப்படுகிறது. மியான்மரிலிருந்து நாடு திரும்பிய தமிழர்கள் பலர் இங்கு வாழ்கின்றனர். அதனால் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் இங்கு காணமுடியும். [1] புதிதாக தொடங்கப்படவிருக்கும் ஆசிய இரயில் போக்குவரத்து மூலம் சரக்குகளை தரைவழியாக சிங்கப்பூரிலிருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லலாம். இந்த இரயில் பாதை மோரே வழியாக செல்லும்.

மோரே
Moreh
சிற்றூர்
மோரே Moreh is located in மணிப்பூர்
மோரே Moreh
மோரே
Moreh
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மோரே நகரத்தின் அமைவிடம்
மோரே Moreh is located in இந்தியா
மோரே Moreh
மோரே
Moreh
மோரே
Moreh (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°21′06″N 94°20′32″E / 24.35172°N 94.34217°E / 24.35172; 94.34217
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்தேங்க்னோவ்பல்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,847
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுMN
இணையதளம்manipur.gov.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 9 வார்டுகள் மற்றும் 3,231 வீடுகள் கொண்ட மோரே நகரத்தின் மக்கள் தொகை 16,847 ஆகும். அதில் ஆண்கள் 8,670 மற்றும் பெண்கள் 8,177 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 71.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 41 மற்றும் 9,475 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 26.14%, இசுலாமியர் 13.97%, கிறித்தவர்கள் 56.67 மற்றும் பிறர் 3.23% ஆகவுள்ளனர். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. இந்திய - மியான்மர் எல்லையில் 57 ஆண்டுகள்: பண்பாட்டை மறவாத மணிப்பூர் தமிழர்கள்
  2. Moreh Population, Religion, Caste, Working Data Chandel, Manipur - Census 2011

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரே,_இந்தியா&oldid=3915173" இலிருந்து மீள்விக்கப்பட்டது