மோல் சுரப்பி

மோல் சுரப்பி (Moll's gland) என்பது குற்றிலை சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது. இது கண் இமையின் விளிம்பில் காணப்படும் ஒரு மாற்றியமைக்கப்பட்ட வறுவியர்ப்பு சுரப்பி ஆகும்.[1][2] இவை கண் இமைகளின் அடிப்பகுதிக்கு அடுத்ததாகவும், கண் இமையின் விளிம்பிற்குள் மைபோமியன் சுரப்பிகளுக்கு முன்பாகவும் உள்ளன. இந்தச் சுரப்பிகள் ஒப்பீட்டளவில் பெரியவை. குழாய் வடிவத்தில் காணப்படும் இச்சுரப்பிகள் இடச்சுக் கண் மருத்துவரான ஜேக்கப் அண்டன் மோல் (1832-1914) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.

மோல் சுரப்பி
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்glandulae ciliares conjunctivales
TA98A15.2.07.043
TA26834
FMA59159
உடற்கூற்றியல்

மோல் சுரப்பிகள் கண் இமைகளில் உள்ள முடிகளின் அடியில் தனது சுரப்பினை வெளியிடுகின்றன. மோல் மற்றும் சீசு சுரப்பிகள் சருமத்தில் மெழுகினைச் சுரக்கின்றன. இது கண் இமைகளை மென்மையாக வைத்திருக்கிற உதவுகிறது.

மோல் சுரப்பிகள் தொற்றினால் பாதிக்கப்படுகின்றன. சருமம் மற்றும் உயிரணு துகள்களால் இதன் குழாய் அடைக்கப்படுகிறது. சுரப்பியின் குழாயின் அடைப்பு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வீக்கம் கண்ணிமைச் சீழ்க்கட்டி எனப்படுகிறது.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. D. Vaughan, T. Asbury. The lids General Ophthalmology, Lange Medical Publications, Los Altos, Ca (1980), pp. 45-46
  2. D.W. Fawcett Eyelids and accessory organs of the eye D.W. Fawcett (Ed.), Bloom and Fawcett – a Textbook of Histology, Chapman & Hall, London (1994), pp. 914-918
  3. P. Combemale, J. Kanitakis, N. Dupin, C. Parraud, M. Guigon. Multiple Moll's gland cysts (apocrine hidrocystomas). Dermatology, 194 (1997), pp. 195-196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்_சுரப்பி&oldid=4162886" இலிருந்து மீள்விக்கப்பட்டது