மௌலானா வஹிதூதீன் கான்
மௌலானா வஹிதூதீன் கான் (Maulana Wahiduddin Khan) (பிறப்பு 1925 ஜனவரி 1) பத்ம பூசண் விருது [1] பெற்ற இந்தியாவின் முதன்மையான இஸ்லாமியப் பேரறிஞர். இவர் திருக்குர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியுள்ளார். முஸ்லீம் மார்க்கச் சிந்தனையாளர்களால் மிகவும் மதிக்கப்படும் இவர் சமரசக் கருத்தை முன்வைத்து வருபவர்.இவர் உலக அமைதியைக் குறிக்கோளாகக் கொண்டவர். இந்தியாவின் பத்மபூஷண் உட்பட பல விருதுகள் பெற்றவர். 2009 ஆம் ஆண்டின் 500 முன்னோடி முஸ்லீம்கள் (The 500 Most Influential Muslims of 2009) புத்தகத்தில் ’உலகிற்கு இஸ்லாமின் ஆன்மிகத் தூதராகப்’ பாராட்டப்படுபவர்.
மௌலானா வஹிதூதீன் கான் | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 1, 1925 உத்தரப்பிரதேசம், இந்தியா |
தொழில் | இஸ்லாம் ஆன்மீகத் தலைவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Tazkirul Quran |
1925 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர். தமது சிறுவயதிலேயே தந்தையை 1929 ஆம் வருடம் இழந்தார்.காந்தீயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தவர்.[2]
பல புத்தகங்கள் எழுதியுள்ளவர்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரது சொற்பொழிவுகள் ஒளிபரப்பாகின்றன.சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ Tamara Sonn & Mary Williamsburg, (2004), A Brief History of Islam, Blackwell. ISBN 1-4051-0902-5.
- ↑ "Maulana Wahiduddin Khan | CPS International". https://www.cpsglobal.org/mwk.
- ↑ "பத்ம விருதுகள்". சனவரி 21, 2021. https://www.thehindu.com/news/national/list-of-padma-awardees-2021/article33661766.ece.