ம. ரா. போ. குருசாமி
முனைவர் ம.ரா.போ. குருசாமி தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள மகமது சாகிப்புரம் என்னும் மம்சாபுரத்தில் 1922ஆம் ஆண்டில் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6 ஆம் தேதியன்று கோவையில் காலமானார்.[1]
கல்வி
தொகுமகமதுசாகிப்புரம் ராக்கப்பிள்ளை போத்திலிங்கம் குருசாமி பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் தஞ்சாவூரில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஈராண்டுகள் பயின்றார். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், மு. வரதராசன், அ. ச. ஞானசம்பந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்களிடம் 1940–45 ஆம் ஆண்டுகளில் தமிழ் பயின்றார். அக்கல்லூரியில் B.O.L.(Hons) பட்டம் பெற்ற முதலணி மாணவர்கள் நால்வரில் ஒருவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர் (M.Litt.), முனைவர் (Ph. D) பட்டங்களைப் பெற்றார்.
பணி வரலாறு
தொகு- சக்தி வை. கோவிந்தன் நடத்திய சக்தி காரியாலத்தில் நூற்பதிப்பாசிரியர். (1945).
- ம. பொ.சி. நடத்திய செங்கோல் இதழில் துணையாசிரியர்.
- அரசுக் கல்லூரி ஒன்றில் தமிழ் விரிவுரையாளர்.
- கோவை பூ.சா.கோ.கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்.
- சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியர்.
- தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பதிப்புத் துறைப் பேராசிரியர்.
படைப்புகள்
தொகுவாழ்க்கை வரலாறு
தொகு- குருமுகம்; கவிதா வெளியீடு, சென்னை.
- மா. இராசமாணிக்கனார், இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி, சென்னை.
- மூவா நினைவுகள், விஜயா பதிப்பகம்,கோயம்புத்தூர்; மு.பதிப்பு 2012
- திரு.வி.க., இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாதெமி, சென்னை.
இலக்கியச் சொற்பொழிவு
தொகு- அகலமும் ஆழமும், முதற் பதிப்பு 1985, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (பக்கங்கள்: 119)
- மு.வ.முப்பால்; முதற் பதிப்பு 1976.
- கம்பர் முப்பால் (அமரர் ஏவி.எம். நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு – 1993), கம்பன் கழகம், சென்னை, ஆகத்து 1993.
இலக்கியக் கட்டுரைகள்
தொகு- அகப்பொருள் தெளிவு (இணை ஆசிரியர் முனைவர் தி. லீலாவதி); பாரிநிலையம், சென்னை;
- இலக்கியச் சுவை; 2003 பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; (பக்கங்கள் 87)
- இலக்கியச் சிந்தனை; 2004, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; (பக்கங்கள் 187)
- கம்பர் கலைப்பெட்டகம்; 2012, காவ்யா பதிப்பகம், சென்னை (பக்கங்கள் 900)
- காணிக்கைக் கட்டுரைகள்; 2001 பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; (பக்கங்கள் 352)
- சங்க காலத்திற்கு முன். . . ; 1975, மெர்க்குரி புத்தக கம்பனி, கோவை [2]
- சிலப்பதிகார செய்தி; 1968, மெர்குரி புத்தக கம்பனி, கோவை.
- சிலம்புவழிச் சிந்தனை; 1999, பழநியப்பா பிரதர்ஸ், சென்னை (பக்கங்கள் 135)
- தமிழ் நூல்களில் குறிப்பு பொருள்; மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
- பழந்தமிழகம்
இலக்கியத் திறனாய்வு
தொகு- கபிலம், மோகன் புருவாரிஸ் மற்றும் டிஸ்டிலர்ஸ் லிமிடெட், 718-85 அண்ணாசாலை, சென்னை-2.
- குலோத்துங்கன் கவிதைகள் ஒரு திறனாய்வுப் பார்வை, பாவை பப்ளிகேசன்ஸ், சென்னை;
கட்டுரைகள்
தொகு- ஒரு தெய்வத் திருப்பணி
சிறுகதைகள்
தொகு- உழைப்பில்லாச் சுகம்; தமிழ்முரசு (ஐந்தாவது புத்தகம்), 1946 செப்டம்பர், பக்கம் 25 -36.
- சில்லறையும் மொத்தமும்; தமிழ்முரசு (ஏழாவது புத்தகம்), 1946 நவம்பர், பக்கம் 11 – 17.
பதிப்பித்தவை
தொகு- பாரதி கவிதைகள் – ஆய்வுப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
இதழ்ப்பணி
தொகு- கலைக்கதிர் திங்கள் இதழின் பதிப்பாசிரியர்
- சர்வோதயம் திங்கள் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்
வகித்த பொறுப்புகள்
தொகு- துணைத்தலைவர், கோவைக் கம்பன் கழகம்
- துணைத்தலைவர், நன்னெறிக் கழகம், கோவை
- உறுப்பினர், கம்பன் அறநிலை
- உறுப்பினர், பூ. சா. கோ. கோ. கோவிந்தசாமி நாயுடு இலக்கிய அறநிலை
- அமைப்புக் குழு உறுப்பினர், கம்பராமாயண உரைக் குழு
- பேரவைச் செம்மல், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்.
- இவரது உரைநடை இலக்கியப் பணியைப் பாராட்டி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) 2012 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
- நூலறி புலவர், குன்றக்குடி மடம்.
- கம்பன் காவலர், கோவை கம்பன் கழகம்.
- பேராசிரியர் ராதாகிருஷ்ணன் விருது, சென்னை கம்பன் கழகம்.
- குலபதி முன்ஷி விருது, பாரதிய வித்யாபவன்-கோவை.
- சேக்கிழார் விருது, சேக்கிழார் மன்றம்.
- சைவ நன்மணி, கோவை சைவப்பெருமக்கள் பேரவை.
- நன்னெறிச் செம்மல், கோவை நன்னெறி மன்றம்.
- பாரதி விருது, ஸ்ரீராம் அறக்கட்டளை.
- திரு.வி.க. விருது, தமிழக அரசு.
- ஆதித்தனார் விருது, கோவை தினத்தந்தி நாளிதழ்.
- இளையராஜா விருது
- கலைஞர் விருது.