ம. வீ. வே. சத்தியநாராயண மூர்த்தி

இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர்

மதுகுமில்லி வீர வெங்கட சத்தியநாராயண மூர்த்தி (Mathukumilli Veera Venkata Satyanarayana Murthi)[1] (3 ஜூலை 1938 - 2 அக்டோபர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும், ஆசிரியரும் ஆவார். காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை நிறுவியவர்.

ம. வீ. வே. சத்தியநாராயண மூர்த்தி
பிறப்பு(1938-07-03)3 சூலை 1938
அயினவல்லி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு2 அக்டோபர் 2018
கான்ட்வெல், அலாஸ்கா , அமெரிக்க ஐக்கிய நாடுகள்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் இறப்பு

தொகு

மூர்த்தி 1938 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி ஐனவில்லி என்ற கிராமத்தில் பிறந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

இவர் ஒரு குளிர்பான நிறுவனத்தைக் கொண்டிருந்தார். காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை 1980 இல் நிறுவினார். 1983 இல், தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். மேலும் 1987 முதல் 1989 வரை விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு தலைமை தாங்கினார். பின்னர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பதவியை விட்டு வெளியேறினார், ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் 1991 இல் விசாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்தெடுக்கபட்டார். 1996 இல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பதவி விலகினார். 1999 இல் மக்களவைக்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004 வரை பணியாற்றினார். 2014 இல், மூர்த்தி ஆந்திரப் பிரதேச சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

இவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர் என கருதப்பட்டது. இவரது பேரன் சிறீபரத் மதுகுமில்லி, பாலகிருஷ்ணாவின் இளைய மகள் நந்தமுரி தேஜஸ்வினியை மணந்தார்.[5]

இறப்பு

தொகு

அக்டோபர் 1, 2018 அன்று, அலாஸ்காவின் கான்ட்வெல் அருகே ஜார்ஜ் பார்க்ஸ் நெடுஞ்சாலையில் பயணித்தபோது வாகன மோதலில் இறந்தார்.[1] விசாகப்பட்டனத்தில் இவரது இறுதுச் சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.[6]

மேற்கோள்கள்

தொகு