யமகா சிக்னஸ் ரே இசட்ஆர்

யமகா சிக்னஸ் ரே இசட்ஆர் என்பது யமகா நிறுவனத்தின் ஒரு குதியுந்து ஆகும்.[1] இது 113 சிசி திறனுடைய குதியுந்தாகும். ஆண்களுக்காக வடிவமைப்பு செய்யப்பட்டது என யமகா நிறுவனம் கூறுகிறது. [2]

டிஸ்க் மற்றும் ஸ்டேன்டர்ட்

தொகு

யமகா ரே இசட்ஆர் குதியுந்து ஸ்டேன்டர்ட் மற்றும் டிஸ்க் ஆகிய பதிப்புகளில் வெளியானது.

தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்

தொகு
  • ஒரு ஒற்றை சிலிண்டர், நான்கு வீச்சு கொண்ட மோட்டார் வண்டியாகும்.
  • 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமருமிடத்திற்கு அடியில் சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது.
  • பெட்ரோல் வால்வும் அமருடமிடத்திற்கு அடியில் அமைந்துள்ளது.
  • கைப்பேசிகள் சார்ஜர் செய்யும் உபகரணம் தேவைப்பட்டால் இணைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
  • எரிபொருள் அளவு காட்டும் கருவி, வேகம் காட்டும் கருவி ஆகியவை அனலாக் வடிவில் உள்ளன.
  • குதியுந்தின் எடை 103 கிலோ கிராம் ஆகும்.

நிறங்கள்

தொகு

யமகா சிக்னஸ் ரே இசட்ஆர் கீழ் வரும் நிறங்களில் வெளிவந்தது.[3]

  • ஆர்மடா நீளம் (டிஸ்க்)
  • மாட் பச்சை (டிஸ்க் / டிரம்),
  • மேவரிக் நீளம் (டிஸ்க் / டிரம்)
  • ரூஸ்டர் சிகப்பு (டிஸ்க்)

ஸ்ட்ரீட் ரேலி

தொகு

யமகா நிறுவனம் ரே இசட்ஆர் குதியுந்தினை சில மாற்றங்கள் செய்து ஸ்ட்ரீட் ரேலி என வெளியிட்டது. இந்தக் குதியுந்தில் ரேவில் பயன்படுத்திய அதே எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. [4]

சக்கரங்களில் அலாய் வடிவமைப்பு, டிஸ்க் பிரேக், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது. கைகளுக்கு காற்று படுவதை தடுக்கும் தடுப்பு, சாவி துவாரத்தினை மூடுகின்ற அமைப்பு ஆகியவை புதியதாக இணைக்கப் பட்டிருக்கின்றன.

நிறங்கள்

தொகு
  • ரேலி சிகப்பு
  • ரேசிங் ஊதா


யமகா சிக்னஸ் ரே இசட், யமகா சிக்னஸ் ரே இசட்ஆர், யமகா சிக்னஸ் ரே இசட்ஆர் 125 என மூன்று வகையான மாறுபட்ட குதியுந்துகளை யமகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. "`ஸ்ட்ரீட் ராலி'- யமாஹா ரே- ZR ஸ்கூட்டரின் புது எடிஷன்". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)
  2. Motor, India Yamaha. "Yamaha RAY ZR Moto GP Edition Price, Model, Mileage, Specs, Images". www.yamaha-motor-india.com.
  3. www.news18.com/amp/news/auto/yamaha-introduces-new-color-options-to-the-cygnus-ray-zr-1693445.html
  4. "Yamaha Ray ZR Street Rally Edition - 5 Things To Know". https://www.outlookindia.com/. {{cite web}}: External link in |work= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமகா_சிக்னஸ்_ரே_இசட்ஆர்&oldid=2918186" இலிருந்து மீள்விக்கப்பட்டது