யவன இராச்சியக் கல்வெட்டு

மதுராவுக்கு அருகில் கிடைத்த கி.மு முதலாம் நூற்றாண்டைய கல்வெட்டு

யவன இராச்சியக் கல்வெட்டு (Yavanarajya inscription), இதனை மகேரா கிணற்றுக் கல்வெட்டு என்றும் அழைப்பர்[2]கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்மணற்கல்லால் ஆன இக்கல்வெட்டு பிராமி எழுத்துமுறையில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதி மக்களுக்கு, பிராமணர் ஒருவர் கிணறு மற்றும் குளம் வெட்டிக் கொடுத்ததைக் குறித்துள்ளது. இந்தியாவின் மதுராவிற்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகேரா எனும் ஊரின் கிணற்றின் அருகே 1988-இல் இக்கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது.[3]தற்போது இக்கல்வெட்டு மதுரா அருங்காட்சியகத்தில் உள்ளது.[3][4]

யவன இராச்சியக் கல்வெட்டு
பண்டைய சமஸ்கிருத மொழி கல்வெட்டு
மதுரா அரசு அருங்காட்சியகம் GMM 88.150
செய்பொருள்செம்மணற்கல்
அளவு102 x 37 செண்டி மீட்டர்
எழுத்துபிராமி எழுத்துமுறையில் சமஸ்கிருத கல்வெட்டு[1]
உருவாக்கம்கிமு முதல் நூற்றாண்டு
கண்டுபிடிப்பு1988, in Maghera, a village outside Mathura
27°34′16″N 77°35′24″E / 27.571171°N 77.590097°E / 27.571171; 77.590097
இடம்மதுரா, உத்தரப் பிரதேசம்
தற்போதைய இடம்அரசு அருங்காட்சியகம், மதுரா, இந்தியா

கல்வெட்டின் மூலம் யவன இராச்சியத்தின் 116-வது ஆண்டு ஆட்சியின் போது, பண்டைய இந்தியாவின் மதுரா பகுதி யவனர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது எனத்தெரிகிறது.[5]இந்தோ-கிரேக்க நாட்டை ஆண்ட யவனர்கள் ஆட்சியின் போது இல்கல்வெட்டு நிறுவப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gerhard Lüdtke; et al. (2009). Kurschners Deutscher Gelehrten-Kalender 2009, Vols 1-4. W. de Gruyter. p. 2766.
  2. Goyal, Shankar (2004). India's ancient past (in ஆங்கிலம்). Book Enclave. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181520012.
  3. 3.0 3.1 History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007 pp. 254-255
  4. "Some Newly Discovered Inscriptions from Mathura : The Meghera Well Stone Inscription of Yavanarajya Year 160 Recently a stone inscription was acquired in the Government Museum, Mathura." India's ancient past, Shankar Goyal Book Enclave, 2004, p.189
  5. Fussman, Gérard. The riddle of the ancient eras is not yet solved (PDF). p. 242.