யாஹூ! 360° ஆனது ஆர்குட் போலவே பிரத்தியேகத் தொடர்பாடல் போர்ட்டலாகும். இது இப்போது சோதனை நிலையிலேயே உள்ளது. இது சமூகவலையமைப்பு, வலைப்பதிவு, படங்களைப் பகிர்தல் போன்றவற்றில் ஈடுபடமுடியும்.

யாஹூ! 360°
Yahoo! 360° logo
எடுத்துக்காட்டு 360° பிரத்தியேக இணையப்பக்கம் (உள்நுளைந்து இணையப்பக்கம் ஒன்றைப் பார்வையிடும் போது)
வலைத்தள வகைசமூக வலைத் தளம்
உரிமையாளர்யாஹூ!
உருவாக்கியவர்யாஹூ! 360° குழு
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்தேவையானது
உரலிhttp://360.yahoo.com/


பயனர்கள் பிரத்தியேக இணையப் பக்கங்கள் அமைத்து யாஹூ! போட்டோஸ் ஊடாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து, வலைப்பதிவுகளை மேற்கொண்டும் இணையத்தொடர்பிலுள்ள நண்பர்கள் போன்றவிபரங்களையும் பெற்றுகொள்ள முடியும். யாஹூ! 360° நண்பர்களின் மேம்படுத்தற் சுருக்கங்களும் காட்டப்படும்.

இச்சேவையானது மார்ச் 29, 2005 இல் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு

தொகு

இச்சேவையானது மார்ச் 29, 2005 இல் அழைப்பின் பேரிலேயே இணையமுடிந்தது. ஜூன் 24 2005 18 வயதிற்கும் மேற்றபட்ட பயனர்களுக்கு இச்சேவை கிடைக்கின்றது.

வசதிகள்

தொகு

யாஹூ! 360° உள்ள வசதிகள்

  • தீம்ஸ் - ஏலவேயுள்ளதும் வேண்டியவாறு மாற்றக்கூடியதும்
  • வலைப்பதிவு - (பூரணமானதும் RSS ஊட்டுக்கள் உள்ளதும்)
  • நிரல்கள் - பயனரின் விருப்பதிற்கு ஏற்ப பிரபலமான படங்கள், புத்தங்கள் மற்றும் பல்வேறுபட்ட அம்சங்கள்.
  • ஊட்டுக்கள் - விருப்பமானவற்றில் இருந்து தங்களுடையதோ நண்பர்களுடையதையோ RSS ஊட்டுக்களூடாகப் பெறுதல்
  • மனச்சிதறல்கள் - வேகமாக வலைப்பதிவிலில்லாதவற்றைப் பிரசுரித்தல்
  • நற்சான்றிதழ்கள் - நண்பர்களை ஆய்வு செய்து நற்சான்றிதழ்கள் அளித்தல்
  • குழுக்கள் - ஒரே ஆர்வமுடையவர்கள் குழுக்களாக இயங்குதல்
  • நணபர்களின் மேம்படுத்தல்கள் - நண்பர்களின் தற்போதைய நடத்தைகளை அவதானித்தல்
  • வேகமான வர்ணணை - மற்றவர்களின் பக்கத்தில் சுருக்கமாக செய்திகளை விட்டுச் செல்லல்
  • லோஞ்காஸ்ட் - பாட்டுநிலையங்கள் மற்றும் இரசனைகளைப் பகிர்தல்
  • மீளாய்வுசெய்தல் - யாகூ! லோக்கல், யாகூ! ஷாப்பிங், யாகூ! ரவல், யாகூ! கேம்ஸ் போன்றவற்றை மீளாய்வு செய்தல்

யாஹூ! மெசன்ஜருடன் சேர்ந்தியங்கல்

தொகு

யாஹூ! மெசன்ஜரின் 8 ஆம் பதிப்பில் இருந்து யாஹூ! 360° பக்கத்தைப் பார்க்கக் கூடியது. யாஹூ! மெசன்ஜரிலிருந்தவாறே வலைப்பதிவுகளைச் செய்யவும், மனச்சிதறல்களை மேம்படுத்தவும் முடியும். இந்த சேர்தியங்கும் முறையால நண்பர்களை மேம்படுத்தல்கள உடனுக்குடன் தெரியப்படுத்தவியலும்.

ஏனைய யாகூ! சேவைகளுடன் சேர்ந்தியங்கல்

தொகு

யாஹூ! 360 ஆனது மெசன்ஜருடன் மாத்திரம் அன்றி ஏனைய யாஹூ! இன் சேவைகளுடனும் சேர்ந்தியங்குகின்றது.

அதிகாரப்பூர்வ வலைப்பதிப்பு

தொகு

யாஹூ! 360° குழுவானது அதிகாரபூர்வமாக யாஹூ! பயனர்களிடம் இருந்து கருத்துக்களைக் கேட்டறிந்து வலைப்பதிவுகளூடாக விடையளிக்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_360°&oldid=3371695" இலிருந்து மீள்விக்கப்பட்டது