யாங் சூ (சீனம்: 楊朱/杨朱; பின்யின்: Yáng Zhū; கிமு 370-319) ஒரு சீன மெய்யிலாளர், இன்பவாதி, அறவழி தன்முனைப்புவாதி. இவர் கன்பூசிய, மோகிசிய சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனைகளை முன்வைத்தார்.

இவரது சிந்தனைகள் பற்றி Liezi (列子) நூலின் 7 ம் அதிகாரத்தில் கிடைக்கிறது. இவர் தற்போது அவ்வளவு கவனத்தை பெறாமல் இருந்தாலும், இவர் வாழ்ந்த காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். இவரைப் பற்றி மென்சியசு மோகியுடன் ஒப்புட்டு கருத்துக் கூறி உள்ளார்.

சுருக்கம்

தொகு

"வாழ்க்கை வேதனைகள் நிறைந்தது. வாழ்வின் நோக்கம் இன்பமே. கடவுள் இல்லை. பிறவிச் சுழற்சி இல்லை. மனிதர்கள் இயற்கைக்கு கட்டுப்பட்ட, அனாதாரனவர்கள். இயற்கை மனிதர்களுக்கு தெரிவில்லாத முன்னோர்களையும், பண்பையும் கொடுத்துள்ளது. அறிவுள்ளவன் இந்த நியதியை முறையீடு இல்லாமல் ஏற்றுக் கொள்வான். கன்பூசியினதும், மோகியினதும் பண்பு, அன்பு, நற்பெயர் போன்ற ஒழுக்கக் கட்டுப்பாடுகளால் அறிவுள்ளவன் ஏமாந்துவிடமாட்டான். இந்த ஒழுக்கங்கள் கெட்டிக்காரர்களால் முன்வைக்கப்படும் ஒரு வஞ்சனை. அகிலவுலக அன்பு இவ்வுலகின் விதிகளை அறியா சிறுவர்களுக்கான ஒரு திரிபுணர்ச்சி. நற்பெயர் என்பது ஒருவர் இறந்த பின்பு அவனால் ஒருவரால் அனுபவிக்கமுடியா வெற்றுக் குமிழி. வாழ்வில் கெட்டவர்கள் போலவே நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள். கெட்டவர்கள் கூடுதலாக இன்பதை அனுபவிக்கிறார்கள்."

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_சூ&oldid=4055325" இலிருந்து மீள்விக்கப்பட்டது