யானை அருவி (Elephant Falls) இந்தியாவின் மேகாலயாவின் சில்லாங்கில் உள்ள இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும்.[1] மலை நீரோடை, பெரணி சூழ்ந்துள்ள பாறைகளின் வழியே இரண்டு தொடர்ச்சியான நீர்வீழ்ச்சிகளாக வீழ்கிறது.[2]

யானை அருவி, சில்லாங், மேகாலயா, இந்தியா

வரலாறு தொகு

நீர்வீழ்ச்சியின் காசி மொழி பெயரானது கா க்ஷைட் லாய் படேங் கோஹ்சிவ் என்பதாகும். இதன் பொருள் "மூன்று-நிலை நீர்வீழ்ச்சி" என்பதாகும்.[3] உள்ளூர் மக்கள் இந்தப்பெயரினை இன்னும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் தற்போதைய பெயர் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] அருவிக்கு அருகில் உள்ள பெரிய பாறை, யானை போலத் தோற்றமளிக்கும். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இதனைக் கண்ட ஆங்கிலேயர்கள் இந்த அருவிக்கு யானை அருவி எனப்பெயரிட்டனர். இந்த பாறை 1987ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அழிக்கப்பட்டது. [5]

விளக்கம் தொகு

யானை நீர்வீழ்ச்சியின் முதல் வீழ்ச்சி மிகவும் அகலமானது மற்றும் மரங்களிடையே மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டாவது வீழ்ச்சி மிகவும் அமைதியாகவும் குளிர்காலத்தில் (மற்றும் வறண்ட மாதங்கள்) முக்கியமற்றதாகத் தெரிகிறது. மூன்றாவது வீழ்ச்சி மிக உயரமானதாகும். சுத்தமான பளிங்கு போன்ற நீரானது பாறைகளின் மீது விழுகிறது.[6][7]

நீர்வீழ்ச்சியின் பக்கங்களும் பசுமையான புற்களால் சூழப்பட்டுள்ளன. இங்கு பெரணிச் செடிகள் நிறைந்துள்ளன.

அமைவிடம் தொகு

யானை நீர்வீழ்ச்சி சில்லாங்கின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் மேல் சில்லாங்கில் அமைந்துள்ளது. சில்லாங் நகர மையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 
யானை நீர்வீழ்ச்சியின் வாயிலில் அறிவிப்பு பலகை

சில்லாங் சிகரத்திற்கு மிக அருகில் ஒரு அறிவிப்புப் பலகை, மலையின் விளிம்பிற்கு மாறும் ஒரு சிறிய சாலையைக் குறிக்கிறது. இந்த சாலை வழியாக நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம்.

நுழைவாயிலிலிருந்து, வீழ்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திற்கும் செல்ல முதல் மற்றும் இரண்டாம் நிலையில் ஓய்வெடுக்க வசதியா இருக்கைகளும் படிக்கட்டுகளும் உள்ளன.

இந்நீர்வீழ்ச்சியினை பார்வையிட 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்கக் கூடுதலாக 20 ரூபாய் செலுத்தவேண்டும்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Elephant Falls, Shillong (Meghalaya) | Elephant Wateralls Timing, Entry Fees". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
  2. "Waterfalls of Meghalaya: Department of Tourism, Government of Meghalaya". megtourism.gov.in. Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  3. "Elephant Falls". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  4. "Elephant Falls Shillong". www.darjeeling-tourism.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  5. "Elephant Falls Shillong". www.darjeeling-tourism.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  6. "Elephant Falls". World of Waterfalls (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
  7. "6 Reasons Why You Should Visit the Elephant Falls – Travel Guide: Best Places to Visit" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
  8. "Elephant Falls Shillong". www.darjeeling-tourism.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானை_அருவி&oldid=3569270" இலிருந்து மீள்விக்கப்பட்டது