கோட்டை (சதுரங்கக் காய்)

சதுரங்கம்
(யானை (சதுரங்கம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோட்டை அல்லது யானை (Rook, பாரசீகம்: رخ, வடமொழி: रथ) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.[1] சதுரங்கத்தின் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் இருவரும் இரண்டு கோட்டைகள் வீதம் கொண்டிருப்பர்.[2]

கோட்டை

ஆங்கிலத்தில்

தொகு

இந்தக் காய் ஆங்கிலத்தில் Rook, Castle, Tower, Marquess, Rector, Comes ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது.[3]

நிலையும் நகர்வும்

தொகு

சதுரங்க விளையாட்டின் ஆரம்பத்தில் a1, h1 ஆகிய கட்டங்களில் வெள்ளைக் கோட்டைகளும் a8, h8 ஆகிய கட்டங்களில் கறுப்புக் கோட்டைகளும் வைக்கப்பட்டிருக்கும்.[4] கோட்டையானது கிடையாகவோ செங்குத்தாகவோ கைப்பற்றப்படாத கட்டங்களினூடாக சதுரங்கப் பலகையின் எல்லையினுள் எவ்வளவு கட்டங்களிற்கும் செல்ல முடியும்.[5] கோட்டையானது எதிரியின் காய் நிலை பெற்றுள்ள கட்டத்திற்குச் செல்வதனூடாக எதிரியின் காயைக் கைப்பற்றிக் கொள்ளும். கோட்டையானது அரசனுடன் இணைந்து கோட்டை கட்டுதல் என்னும் சிறப்பு நகர்வையும் மேற்கொள்ளும்.[6]

abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கோட்டைகளின் ஆரம்ப நிலை
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வெள்ளைப் புள்ளிகளால் காட்டப்பட்ட எந்தவொரு கட்டத்துக்கும் வெள்ளைக் கோட்டை செல்ல முடியும். கறுப்புக் கோட்டையானது கறுப்புப் புள்ளிகளால் காட்டப்பட்ட கட்டங்களுக்குச் செல்லவோ e7இல் உள்ள வெள்ளைக் காலாளைக் கைப்பற்றவோ முடியும்.
சதுரங்கக் காய்கள்
  அரசன்  
  அரசி  
  கோட்டை  
  அமைச்சர்  
  குதிரை  
  காலாள்  

சார்புப் பெறுமானம்

தொகு

பொதுவாக, கோட்டைகள் குதிரைகளையும் அமைச்சர்களையும் விடப் பெறுமதி வாய்ந்தவை. இரண்டு கோட்டைகள் ஓர் அரசியை விடச் சிறிதளவு பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படும். கோட்டைகளும் அரசிகளும் பெருங்காய்களென்றும் அமைச்சர்களும் குதிரைகளும் சிறு காய்களென்றும் அழைக்கப்படும்.[7][8]

ஒருங்குறி

தொகு

ஒருங்குறியில் கோட்டைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

U+2656-வெள்ளைக் கோட்டை[9]

U+265C-கறுப்புக் கோட்டை[10]

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ["சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)]
  2. ["சதுரங்கத்தின் விதிகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. சதுரங்கத்தின் விதிகள் (ஆங்கில மொழியில்)]
  3. கோட்டை (ஆங்கில மொழியில்)
  4. "கோட்டைகளை வைத்தல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-29. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  5. ["கோட்டை நகர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-05. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. கோட்டை நகர்வு (ஆங்கில மொழியில்)]
  6. ["கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)]
  7. சிறு காய்கள் (ஆங்கில மொழியில்)
  8. பெருங்காய்கள் (ஆங்கில மொழியில்)
  9. ஒருங்குறி வரியுரு 'வெள்ளைச் சதுரங்கக் கோட்டை (U+2656)' (ஆங்கில மொழியில்)
  10. ஒருங்குறி வரியுரு 'கறுப்புச் சதுரங்கக் கோட்டை (U+265C)'
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டை_(சதுரங்கக்_காய்)&oldid=3731608" இலிருந்து மீள்விக்கப்பட்டது