யாமினி யக்ஞமூர்த்தி

திரை ஒளிப்பதிவாளர்

யாமினி யக்ஞமூர்த்தி முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றும் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.

யாமினி யக்ஞமூர்த்தி
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2019–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
விஜய் கார்த்திக் கண்ணன்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

யாமினி, சக ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனை தொழில் ரீதியான உறவினால் ஈர்க்கப்பட்டு 16 மார்ச் 2022 அன்று மணந்தார்.[1]

தொழில்

தொகு

யாமினி தனிப்பட்ட முறையில் தனது ஒளிப்பதிவு தொழிலை துவங்கும் முன் பிரபல ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 2019ஆம் ஆண்டு வெளிவந்த சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படத்தில் இவர் விஜய் கார்த்திக் கண்ணனுடன் சக ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இப்படம் இவருக்கு தொழில்ரீதியாக நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. பின்னர் 2022இல் வெளிவந்த சாணிக் காயிதம் என்ற திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த இவர் வெகுவாக பாராட்டப்பட்டார். இவ்வாண்டு வெளிவர இருக்கும் ரகுத்தாத்தா என்ற திரைப்படத்தில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள் மேற்.
2019 சில்லு கருப்பட்டி தமிழ் ஆந்தாலஜி படம்
2022 சாணிக் காயிதம் தமிழ்
2023 ரகுத்தாத்தா தமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

யாமினியின் தனிப்பட்ட இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாமினி_யக்ஞமூர்த்தி&oldid=3809411" இலிருந்து மீள்விக்கப்பட்டது