யாலோடு (கிண்ணக்குழி)
யாலோடு (Yalode)[1] என்பது சியரீசு குறுங்கோளின் மேற்பரப்பில் காணப்படும் பெரிய உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கிண்ணக்குழியாகும். கெர்வானுக்கு அடுத்து உறுதிப்படுத்தப்பட்ட இக்கிண்ணக்குழி மற்றொரு பெரிய கிண்ணக்குழியான உர்வாராவுக்கு அருகில் உள்ளது. ஆப்பிரிக்கத் தாக்கொமேயன் இனப் பெண்கள் சேனைக்கிழங்கு அறுவடைநாளில் வணங்கும் தெய்வத்தின் பெயரான யாலோடு இக்கிண்ணக்குழிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. இதனுடைய தோற்றமானது பார்ப்பதற்கு வடமேற்குத் திசையில் பள்ளத்தாக்குகள் இக்கிண்ணக்குழியில் இருந்து புறப்பட்டு வருவது போலத் தோற்றமளிக்கிறது. அப்பள்ளத்தாக்குகள் யாலோடில் இருந்து வெளியேற்றப்பட்டவை போலவும் தெரிகின்றன.
Feature type | கிண்ணக்குழி |
---|---|
அமைவிடம் | சியரீசு |
ஆள்கூறுகள் | 42°14′S 290°38′E / 42.23°S 290.64°E |
விட்டம் | 271 கி.மீ |
Eponym | யாலோடு, ஆப்பிரிக்கத் தாக்கொமேயன் இனப் பெண்கள் சேனைக்கிழங்கு அறுவடைநாளில் வணங்கும் தெய்வம். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
இவற்றையும் காண்க
தொகு- சியரீசின் மீதுள்ள புவியியல் தோற்றங்களின் பட்டியல்
- டோன் (விண்கலம்), யாலோடு கிண்ணக்குழியை கண்டறியப் பயன்படுத்தப்பட்டது.