யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

இலங்கையின் பாடசாலை
(யாழ் மத்திய கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1817 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825ஆம் ஆண்டில் தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர்களின் பெயர்

  • 1816 ஜேம்ஸ் லிஞ்
  • 1820 ரொபேர்ட் கோர்வர்
  • 1825 ஜோசப் ரொபேர்ட்
  • 1834 கலாநிதி.பீட்டர் பேசிவல்
  • 1852 ஜோன் வோல்ட்டன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
Jaffna Central College
முகவரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி is located in Central Jaffna
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாண நகரில் அமைவிடம்
இராசேந்திர பிரசாத் வீதி
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°39′41.90″N 80°0′51.20″E / 9.6616389°N 80.0142222°E / 9.6616389; 80.0142222
தகவல்
வகைஅரசு தேசியப் பாடசாலை 1AB
குறிக்கோள்In gloriam Dei optimi maximi
(கடவுளின் மகிமைக்கு, மிகச் சிறந்ததும் உயர்ந்ததும்)
நிறுவல்1817
நிறுவனர்வன. ஜேம்சு லிஞ்ச்
வண. தொமசு இசுக்குவான்சு
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம்1001002
அதிபர்எஸ். கே. எழில்வேந்தன்
ஆசிரியர் குழு124
தரங்கள்1-13
பால்ஆண்கள்
வயது வீச்சு5-18
மொழிதமிழ்
ஆங்கிலம்
School roll2,130
இணையம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பக். 163, 179, Martin, J.H., Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923