யுகவாரலைட்டு
யுகவாரலைட்டு (Yugawaralite) என்பது CaAl2Si6O16 · 4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1][2] இது சியோலைட்டு குழுவின் தெளிவான இளஞ்சிவப்பு நிற கனிமமாகும். சப்பான் நாட்டின் யுகவாரா நகரத்திற்கு அருகிலுள்ள சில வெந்நீரூற்று நீர்வீழ்ச்சிக்கு அருகில் சகுராய் மற்றும் அயாசி (1952) ஆகியோரால் இக்கனிமம் முதலில் விவரிக்கப்பட்டது.[3]
யுகவாரலைட்டு Yugawaraite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | செயோலைற்று குழு |
வேதி வாய்பாடு | CaAl2Si6O16 · 4H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, இளஞ்சிவப்பு, அல்லது வெள்ளை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | தெளிவற்றது |
விகுவுத் தன்மை | எளிதில் நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5-5 |
மிளிர்வு | முத்து போல பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
மேற்கோள்கள் | [1] |
பெயர்க்காரணம்
தொகுயுகவாரா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் கனிமத்திற்கு யுகவாரலைட்டு எனப் பெயரிடப்பட்டது.
அமைவிடம்
தொகுயுகவாரலைட்டு கனிமம் சப்பான் போன்ற புவிவெப்பம் செயலில் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது.[4] சப்பானில் யுகவாரலைட்டு கனிமம் ஒன்சூ தீவிலுள்ள யுகவாரலைட்டு நகரத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் இது சிறிய அளவில் காணப்படுகிறது. வாசிங்டன், அலாசுகா, அமெரிக்காவின் மஞ்சக்கல் தேசிய பூங்கா, பிரிட்டிசு கொலம்பியா, ஐசுலாந்து, சார்தீனியா மற்றும் இரீயூனியன் தீவு ஆகியவை இது கண்டுபிடிக்கப்பட்ட பிற இடங்களாகும்.[2]
அலாசுகா
தொகுஅலாசுகாவில், அலாசுகாவின் பேர்பேங்க்சு நகரத்திற்கு கிழக்கே 40 மைல் (64 கிமீ) தொலைவில் யுகவாரலைட்டு கனிமம் காணப்படுகிறது. இந்த தளத்தில், யுகவாரலைட்டு 8 மில்லிமீட்டர்கள் (0.31 அங்குலம்) நீளம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.[3]
சப்பான்
தொகுயுகவாரா நகரத்தில் புடோ நீர்வீழ்ச்சியில் நியோச்சீன் அடுக்கில் இப்படிகங்கள் காணப்படுகின்றன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Yugawaralite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-03.
- ↑ 2.0 2.1 "Yugawaralite Value, Price, and Jewelry Information". International Gem Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-03.
- ↑ 3.0 3.1 Eberlein, G. Donald; Erd, R.C.; Weber, Florence; Beatty, L.B. (1971). "New Occurrence OF Yugawaralite from the Chena Hot Springs Area, Alaska". The American Mineralogist 56 (September–October 1971). http://www.minsocam.org/ammin/AM56/AM56_1699.pdf. பார்த்த நாள்: 5 August 2022.
- ↑ "Yugawaralite" (PDF). RRUFF. Mineral Data Publishing. 2001. பார்க்கப்பட்ட நாள் 2024-01-28.
- ↑ "天然記念物 - 四季彩のまち湯河原公式ホームページ". Yugawara Town (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-28.