யுகினா
யுகினா டையாடெமாட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சூசுடெரோபிடே
பேரினம்:
யுகினா

கோட்ஜ்சன், 1836
மாதிரி இனம்
யுகினா குலாரிசு
கோட்ஜ்சன், 1836
சிற்றினங்கள்

உரையில் காண்க

யுகினா (Yuhina) என்பது சூசுடெரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளை கண் பறவை பேரினமாகும்.

யுகினா பேரினமானது 1836ஆம் ஆண்டில் இங்கிலாந்து இயற்கையியலாளர் பிரையன் ஹொக்டன் கோட்ஜ்சன் என்பவரால் வரித் தொண்டை யுகினா சிற்றினத்தினை மாதிரி இனமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2] இதன் பேரினப் பெயர் நேபாளி மொழியிலிருந்து வந்தது.[1][3] இந்தப் பேரினம் முன்பு திமாலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டது. மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இது சூசுடெரோபிடேக்கு மாற்றப்பட்டது.[4][5][6]

இந்த பேரினத்தில் பின்வரும் ஏழு சிற்றினங்கள் உள்ளன.[6]

  • கருப்பு கன்ன யுகினா (யுகினா நிக்ரிமெண்டா)
  • தைவான் யுகினா (யுகினா புருனெய்செப்சசு)
  • மீசை யுகினா (யுகினா பிளாவிகோலிசு)
  • பர்மிய யுகினா (யுகினா குமிலிசு)
  • வெண்பிடரி யுகினா (யுசுனா பேக்கரி)
  • வரித் தொண்டை யுகினா (யுகினா குலாரிசு)
  • செம்பழுப்பு குத யுகினா (யுகினா ஆக்சுபிடாலிசு)

வெண் வயிற்று எர்போர்னிசு (எர்போர்னிசு சாந்தோலுகா) முன்பு இந்த பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. இதன் பொதுப் பெயர் "வெண்வயிற்று யுகினா" என்பதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Brian Houghton Hodgson (1836). "Notices of the ornithology of Nepal". Asiatic Researches 19: 143–192 [165]. https://www.biodiversitylibrary.org/page/43118058. 
  2. Mayr, Ernst; Paynter, Raymond A. Jr, eds. (1964). Check-List of Birds of the World. Vol. 10. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 420.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 412. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  4. Cibois, Alice (2003). "Mitochondrial DNA Phylogeny of Babblers (Timaliidae)". The Auk 120 (1): 35–54. doi:10.1093/auk/120.1.35. https://archive.org/details/sim_auk_2003-01_120_1/page/35. 
  5. Moyle, R.G.; Filardi, C.E.; Smith, C.E.; Diamond, J. (2009). "Explosive Pleistocene diversification and hemispheric expansion of a 'great speciator'". Proceedings of the National Academy of Sciences 106 (6): 1863–1868. doi:10.1073/pnas.0809861105. பப்மெட்:19181851. Bibcode: 2009PNAS..106.1863M. 
  6. 6.0 6.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Sylviid babblers, parrotbills, white-eyes". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகினா&oldid=3939036" இலிருந்து மீள்விக்கப்பட்டது