யுகோசிலாவியப் போர்முனை

(யுகோசிலாவிய களம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யுகோசிலாவியப் போர்முனை (Yugoslav Front) என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட யுகோசிலாவியாவில், அச்சு படைகள் மற்றும் அவர்களது உள்நாட்டு ஆதரவாளர்களுக்கும் யுகோசிலாவிய எதிர்ப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களைக் குறிக்கிறது. 1941 - 1945 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இது யுகோசிலாவிய தேசிய விடுதலைப் போர் என்றும் அழைக்கப்படுகிறது.

யுகோசிலாவியப் போர்முனை
இரண்டாம் உலகப் போர் பகுதி

மேலிருந்து வலஞ்சுழியாக: குரோவோசிய விடுதலை அரசின் தலைவர் ஆண்டே பாவெலிக் மற்றும் இட்லர், தூக்கிலிடப்படும் எதிர்ப்புப்படை வீரர் ஸ்டிபான் பிலிப்போவிக், கொல்லப்பட்ட போர்க்கைதிகள், செட்னிக் தலைவர் டிராசா மிகைலோவிக், பிரித்தானியத் தூதுக்குழுவுடன் ஜோசப் புரோஸ் டிட்டோ
நாள் 1941 – 1945
இடம் யுகோசிலாவியா
யுகோசிலாவிய எதிர்ப்புப் படைகளின் வெற்றி
பிரிவினர்
1941-42:
 Germany
 இத்தாலி
குரோவசிய விடுதலை அரசு
செர்பிய நேடிக் அரசு
 அங்கேரி
 பல்கேரியா
1942-45:
 Germany
 இத்தாலி (1941-43)
குரோவசிய விடுதலை அரசு
செர்பிய நேடிக் அரசு (1941-44)
 அங்கேரி (1941-44)
 பல்கேரியா (1941-44)

செட்னிக்குகள்

1941-42:
செட்னிக்குகள்
யுகோசிலாவிய எதிர்ப்புப் படையினர்
1942-45:
யுகோசிலாவிய எதிர்ப்புப் படையினர்

 சோவியத் ஒன்றியம்
(1944-45)
பல்கேரியா
(1944-45)

பலம்
இத்தாலி 321,000[1]
குரோவசிய விடுதலை அரசு 262,000[2]
யுகோசிலாவியா - 800,000 (1945)[3]
இழப்புகள்
நாட்சி ஜெர்மனி ஜெர்மனி:
24,267 மாண்டவர்
12,060 காணாமல் போனவர்;[4]
குரோவசிய விடுதலை அரசு:
209,000 மாண்டவர்[5]
யுகோசிலாவிய எதிர்ப்புப் படை:
237,000[5] – 350,000 மாண்டவர்; 400,000+ காயமடைந்தவர்[6]
'கொல்லப்பட்ட குடிமக்கள்: ~581,000 [5]
மொத்த யுகோசிலாவிய இழப்புகள்: ~1,200,000

இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் கூட்டணியில் சேரும்படி நாசி ஜெர்மனி யுகோசிலாவியாவை வற்புறுத்தியது. இதற்கு இசைய மறுத்ததால் ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6, 1941 அன்று யுகோசிலியாவைத் தாக்கின. ஏப்ரல் 17ம் தேதி யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. யுகோசிலாவியர்களுள் குரோசியர் ஜெர்மனியின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஜெர்மனியின் துணையுடன் குரோவாசியா தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பிற யுகோசிலாவியர்கள் நேச நாடுகளின் துணையுடன் அச்சு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) இப்போர் தொடர்ந்து நீடித்தது.

ஜெர்மானியர்களை எதிர்த்த உள்நாட்டு எதிர்ப்பு இயக்கத்தில் முதலில் இரு பிரிவுகள் இருந்தன - யுகோசிலாவிய அரச குடும்பத்தை ஆதரித்த செட்னிக்குகள் மற்றும் ஜோசப் புரோஸ் டிட்டோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள். 1941-42 காலகட்டத்தில் ஜெர்மானியர்களை எதிர்த்த செட்னிக்குகள் பின்பு அவர்களுடன் ஒத்துழைக்கத் தொடங்கி தங்கள் எதிர்ப்பினைக் கைவிட்டனர். ஆனால் டிட்டோவின் கம்யூனிசப் படைகள் தொடர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து வந்தன. அவற்றுக்கு சோவியத் ஒன்றியமும் மேற்கத்திய நேச நாடுகளும் உதவி செய்தன. இதனால் இரு எதிர்ப்பு குழுக்களுமிடையே ஒரு உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. டிட்டோவின் கம்யூனிஸ்டுகளை ஒழிக்க அச்சுப் படைகள் தொடர்ச்சியாகப் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இவற்றின் பலனாக 1943ஆம் ஆண்டு டிட்டோவின் படை அழியும் நிலை உருவானது. எனினும் அதனை சமாளித்து தப்பித்த கம்யூனிஸ்டுகள், மேற்கத்திய நேச நாடுகளிடமிருந்து வான்வழியே கிட்டிய தளவாட மற்றும் ஆயுத உதவியினாலும், சொவியத் ஒன்றியத்தின் படை உதவியாலும், அச்சுப் படைகளை முறியடித்து, 1945இல் யுகோசிலாவியன் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இப்போரே வருங்கால யுகோசிலாவிய கூட்டாட்சி அரசு உருவாக அடித்தளம் அமைத்தது. இப்போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் இனவொழிப்பு, எதிர்தரப்புப் போர்க்கைதிகளை விசாரணையின்றி கொல்லுதல், குடிமக்களைக் கொல்லுதல் போன்ற போர்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மனித இழப்புகள் பெருமளவில் இருந்தன.

குறிப்புகள்

தொகு
  1. Tomasevich 2001, p. 255.
  2. Vucinich, Wayne S. (September 1974). "Yugoslav Resistance in the Second World War: The Continued Debate". Reviews in European History 1 (2): 274. "In September 1943, the total strength of the armed forces of the Independent State of Croatia (regular army and Ustashe militia) was about 262,000 officers and men.". 
  3. Perica, Vjekoslav (2004). Balkan Idols: Religion and Nationalism in Yugoslav States. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195174291.
  4. Feldgrau.com
  5. 5.0 5.1 5.2 "'Yugoslavia manipulations with the number Second World War victims, - Zagreb: Croatian Information center,1993 ISBN 0-919817-32-7". Archived from the original on 2021-02-27. பார்க்கப்பட்ட நாள் 2011-06-27.
  6. Tomasevich 1969, p. 120.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகோசிலாவியப்_போர்முனை&oldid=3941962" இலிருந்து மீள்விக்கப்பட்டது