யுரேனியம் மூவயோடைடு
யுரேனியம் மூவயோடைடு (Uranium triiodide) என்பது UI3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியல் சேர்மமாகும். யுரேனியம் மற்றும் அயோடின் தனிமங்கள் இச்சேர்மத்தின் பகுதிப்பொருட்களாக உள்ளன.
இனங்காட்டிகள் | |
---|---|
13775-18-3 | |
பண்புகள் | |
UI3 | |
வாய்ப்பாட்டு எடை | 618.74232 கி/மோல் |
தோற்றம் | கருப்புநிற திண்மம் |
அடர்த்தி | 6.78 g/cm3[1] |
உருகுநிலை | 766 °C (1,411 °F; 1,039 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுயுரேனியம் மற்றும் அயோடின் தனிமங்கள் நேரடியாக வினைபுரிவதன் மூலம் யுரேனியம் மூவயோடைடு உருவாகிறது:[2].
- 2 U + 3 I2 → 2 UI3
பண்புகள்
தொகுகருப்பு நிறத் திண்மமாகக் காணப்படும் யுரேனியம் மூவயோடைடு 766°செ[3] வெப்பநிலையில் உருகுகிறது. படிகமாகலின்போது இச்சேர்மம் சாய்சதுர படிக அமைப்பில் படிகமாகிறது. (புளூட்டோனியம் முப்புரோமைடு வகை) Ccmm வகை இனக்குழுவுடன் அணிக்கோவை அளபுருக்களின் மதிப்பு a = 432.8 பைமீ, b = 1401.1 பைமீ, and c = 1000.5 பைமீ ஆகவும் மற்றும் ஒர் அலகுகூட்டிற்கு நான்கு சூத்திர அலகுகள் என்ற முறையிலும் அமைந்துள்ளன[1] . பல்வேறு வகையான டையீல்-ஆல்டர் வினைகளுக்கு யுரேனியம் மூவயோடைடு பொருத்தமான இலூயிசு அமில வினையூக்கியாகக் கருதப்படுகிறது. இவ்வினைகள் சாதாரண வீரியம் குறைந்த நிலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 J. H. Levy, J. C. Taylor, P. W. Wilson: "The Structure of Uranium(III) Triiodide by Neutron Diffraction", in: Acta Cryst. B, 1975, 31, S. 880–882 (எஆசு:10.1107/S0567740875003986).
- ↑ Georg Brauer (ed.): Handbuch der Präparativen Anorganischen Chemie. 3rd edition. Vol. 2, Enke, Stuttgart 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-87813-3, p. 1218.
- ↑ Arnold F. Holleman, Nils Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102. Auflage, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1, S. 1969.
- ↑ Jacqueline Collin, Leonor Maria, Isabel Santos: "Uranium Iodides as Catalysts for Diels–Alder Reactions", in: Journal of Molecular Catalysis A: Chemical, 2000, 160 (2), pp. 263–267 (எஆசு:10.1016/S1381-1169(00)00257-0)