யுரேனி நொசிக்கா
யுரேனி நொசிக்கா இலங்கையின் தொலைக்காட்சி நாடக நடிகையும், மிஸ் இலங்கை அழகி வாகையாளரும் ஆவார். இவர் இலங்கை அழகியாக மகுடம் சூடியமை தொலைக்காட்சி துறையில் நுழைய வழிவகுத்தது. திரைப்பட மற்றும் விளம்பர துறையிலும் தம் பணியைத் தொடர்கின்றார்.
யுரேனி நொசிக்கா | |
---|---|
பிறப்பு | 29 சனவரி 1983 |
தேசியம் | இலங்கையர் |
கல்வி | மெதோடிஸ் கல்லூரி கொழும்பு |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2007–தற்சமயம் வரை |
வலைத்தளம் | |
www |
ஆரம்ப வாழ்க்கை
தொகுயுரெனி நொசிக்கா இலங்கையில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஒரே புதல்வியாவார். கொழும்பு மெதோடிஸ் கல்லூரியில் கல்வி கற்றார். பின் சட்டப்படிப்பை மேற்கொண்டார். தற்சமயம் நடிகையாக பணி புரிகின்றார்.
தொழில்
தொகு2006 ஆம் ஆண்டு தெரன தொலைக்காட்சி அலைவரிசையில் மாடல்ஸ் ஒப் நியு ஜெனரேசன் அணிவகுப்பில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். பின் உலக சுற்றுலா ராணி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். நொசிகா தன் நடிப்புத்திறமையாலும், இசைத்திறமையினாலும் இத்துறைகளில் பணி புரிகின்றார்.
நொசிகா கோகோ கோலா மென்பானம், நெஸ்லே மற்றும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். கசம் சே என்ற இந்தி தொலைக்காட்சி தொடரை சிங்களத்தில் கின்துரங்கன என்ற பெயரில் இந்தியாவின் பாலாஜி டெலி பிலிம்ஸ் மற்றும் இலங்கை மகராஜா அமைப்பு இணைந்து தயாரித்தன. இத் தொலைக்காட்சி தொடரில் நொசிகா நடித்துள்ளார்.
நொசிகா கின்துரங்கன, சன்டசக்கி, அரொர சிகின சிந்திரல்லா, அயல் மற்றும் பின்கலடன் நநுவ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.[1]
2009 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் நுழைந்தார். நினோ லைவ் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது.[2]
நொசிகா 2015 ஆம் ஆண்டு இசைத்துறையிலும் தடம் பதித்தார். தற்சமயம் கும்பியோ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பரவலாக அறியப்படுகின்றார்.
மற்ற நடவடிக்கைகள்
தொகு2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இணையவழி மிஸ் இலங்கை அழகி போட்டியில் நடுவராக தெரிவு செய்யப்பட்டார்.[3]
பங்குபற்றிய போட்டிகள்
தொகுஆண்டு | தலைப்பு | விளைவு |
---|---|---|
2008 | சிரச நடனம் நட்சத்திரங்கள் | பங்கேற்பாளர் |
2017 | ஹிரு மெகா ஸ்டார் | கிராண்ட் வெற்றியாளர் |
தொலைக்காட்சி தோற்றங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | வகை |
---|---|---|
2009 | கிந்துரங்கன | தொலைக்காட்சி நாடகம் |
2009 | அயல் | தொலைக்காட்சி நாடகம் |
2009 | பிங்கலா டேனவா | தொலைக்காட்சி நாடகம் |
2010 | சீஹினா சிண்ட்ரெல்லா | தொலைக்காட்சி நாடகம் |
2012 | பியாவி | தொலைக்காட்சி நாடகம் [4] |
2014 | சிஎஸ்என் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை ஒலிபரப்பு | லைவ் விளையாட்டு போட்டி |
2017 | கும்பியோ | தொலைக்காட்சி நாடகம் |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் |
---|---|---|
2015 | பிராவிகயா | பொருள் பாடல் தோற்றம் |
2017 | நினி லைவ் | நுநு |
2018 | கஜமன் | குரல். கஜமனின் தாயாக |
அறிவிக்கப்படும் | நைட் ரைடர் | முன்னணி பாத்திரம் |
அறிவிக்கப்படும் | ஆடாலா லுனவ டாம்மா கொடியா [5] |
இசை சரிதம்
தொகுமுன்னணி கலைஞராக
தலைப்பு | ஆண்டு |
---|---|
சாரி போட் | 2015 |
சூயிங் கம் வேஜ் கொல்லோ | 2017 |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | வகை |
---|---|---|
2015 | ராய்கா டெலி'ஸ் | மிகவும் பிரபலமான நடிகை |
2015 | சுமதி விருதுகள் | மிகவும் பிரபலமான நடிகை |
2015 | தெரணா இசை வீடியோ விருதுகள் | சிறந்த டான்ஸ் வீடியோ |
2016 | சுமதி விருதுகள் | மிகவும் பிரபலமான நடிகை |
2018 | தெரணா சன்சிலை திரைப்பட விருதுகள் | மிகவும் பிரபலமான நடிகை |
2018 | தெரணா சன்சிலை திரைப்பட விருதுகள் | ஆண்டின் சமூக மீடியா ஆளுமை |
2018 | சரஸ்வதி திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகை |
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
- ↑ http://www.films.lk/FilmDetails.php?id=1801
- ↑ http://www.adaderana.lk/biznews.php?nid=621
- ↑ "Piyavi on Swarnavahini". Sarasaviya. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Adda Lanuwa Damma Kodiya in post productions". Sarasaviya. Archived from the original on 21 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
- யுரேனி நோஷிகா அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-07-07 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)