யுவான் ஒசே எலுயார்
யுவான் ஒசே எலுயார் உலூபிசெ (Juan José Elhuyar Lubize, 15 சூன் 1754 - 20 செத்தெம்பர் 1796) எசுப்பானிய வேதியியலாளரும் கனிமவியல் அறிஞரும் ஆவார். 1783ஆம் ஆண்டில் தனது உடன்பிறந்தோனாகிய பாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாகத் தங்குதன் என்ற தனிமத்தைக் கண்டறிந்தார்.
யுவான் ஒசே எலுயார் Juan José Elhuyar | |
---|---|
பிறப்பு | 15 சூன் 1754 லொக்ரோனோ |
இறப்பு | செப்டம்பர் 20, 1796 பொகோட்டா, நியூகிரனடா | (அகவை 42)
தேசியம் | எசுப்பானியர் |
துறை | வேதியியல் கனிமவியல் |
அறியப்படுவது | தங்குதன் |
இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள உலோக்குரோனவு நகரில் பிரான்சியப் பாசுக்கு இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எசுப்பானியப் பேராட்சிக்கு உட்பட்ட நியூ கிரானடா, சந்தாப்பு தெ பொகோடா நகரில் இறந்தார்.
வெளி இணைப்புகள்
தொகு- Juan José Elhuyar Lubize பரணிடப்பட்டது 2007-10-08 at the வந்தவழி இயந்திரம் - பிரெஞ்சு