யுவான் செங்கே

சீன வேதியலாளர்

யுவான் செங்கே (Yuan Chengye) சீனாவைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளர் ஆவார். 1924 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் வாழ்ந்தார்.

யுவான் செங்கே
Yuan Chengye
பிறப்பு(1924-10-10)10 அக்டோபர் 1924
சாங்யு, செசியாங்கு மாகானம், சீனா
இறப்பு9 சனவரி 2018(2018-01-09) (அகவை 93)
சாங்காய், சீனா
பணியிடங்கள்சாங்காய் கரிம வேதியியல் நிறுவனம்,
கல்வி கற்ற இடங்கள்சீன தேசிய மருந்து கல்லுரி

யுவான் 1924 ஆம் ஆண்டு சீனாவின் கடலோர செயியாங்கு மாகாணத்தின் சாங்யூ மாவட்டத்தில் பிறந்தார். 1948 ஆம் ஆண்டில் தேசிய மருந்தியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். தற்போது இந்நிறுவனம் சீனா மருந்து பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. 1955 ஆம் ஆண்டில் மாசுகோவின் அனைத்து ஒன்றிய ஆராய்ச்சி நிறுவனமான மருந்து வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். சீனாவுக்குத் திரும்பிய பின்னர் யுவான் சீன அறிவியல் அகாதமியான சாங்காய் கரிம வேதியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். 1958 ஆம் ஆண்டு முதல் அணு எரிபொருள் பிரித்தெடுப்பவர்களுக்கான ஆராய்ச்சி குழுவை இவர் வழிநடத்தினார் [1] நாட்டின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான இவர்களின் அணு எரிபொருள் முயற்சிகள் நாட்டுக்கு மிகவும் சாதகமாக பங்களித்தன.

1970 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் யுவான் மற்றும் அவரது குழுவினர் அருமண் மற்றும் பிற இரும்பு அல்லாத உலோகங்களை பிரித்தெடுப்பதற்காக பல பயனுள்ள சாறுகளை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக கோபால்ட்டு,  நிக்கல் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் இதில் அடங்கும்.

பல சோதனைத் தரவுகளின் அடிப்படையில், யுவானின் குழு பல்வேறு பிரித்தெடுத்தல் அமைப்புகளின் கட்டமைப்பு-வினைத்திறன் உறவை விரிவாக ஆராய்ந்தது.

1997 ஆம் ஆண்டு யுவான் சீன அறிவியல் அகாதமியின் கல்வியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2018 ஆம் ஆன்டு சனவரி 9 அன்று இறந்தார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chengye Yuan, Ph.D." (PDF).
  2. "中科院院士袁承业逝世". Chinese Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2018-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_செங்கே&oldid=3189664" இலிருந்து மீள்விக்கப்பட்டது