செஜியாங் மாகாணம்

செஜியாங் மாகாணம் Zhejiang, என்பது மக்கள் சீனக் குடியரசில் சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். வடக்கில் சியாங்சு மாகாணமும் சாங்காய் நகராட்சியும், வடமேற்கில் அன்ஹுய் மாகாணமும், மேற்கே ஜியாங்சி மாகாணமும், தெற்கே புஜியான் மாகாணமும், கிழக்கே கிழக்கு சீனக் கடலும் அதற்கப்பால், சப்பானின் ருயுக்யு தீவுகளும் இம்மாகாணத்தின் எல்லைகளாக உள்ளன.

செஜியாங் மாகாணம்
Zhejiang Province
浙江省
பெயர் transcription(s)
 • சீனம்浙江省 (Zhèjiāng Shěng)
 • சுருக்கம் (pinyin: Zhè)
 • WuTsehkaon San
Map showing the location of செஜியாங் மாகாணம் Zhejiang Province
சீனாவில் அமைவிடம்: செஜியாங் மாகாணம்
Zhejiang Province
பெயர்ச்சூட்டுகிய்யண்டங் ஆற்றின் பழைய பெயர்
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
காங்சூ
பிரிவுகள்11 அரச தலைவர், 90 கவுண்டி மட்டம், 1570 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்ஜியா பலோராங்
 • ஆளுநர்லீ கியாங்
பரப்பளவு
 • மொத்தம்1,01,800 km2 (39,300 sq mi)
 • பரப்பளவு தரவரிசை26வது
மக்கள்தொகை
 (2013)[1]
 • மொத்தம்5,48,90,000
 • தரவரிசை10வது
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
  அடர்த்தி தரவரிசை8வது
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்ஹான்: 99.2%
ஷி: 0.4%
 • மொழிகளும் கிளைமொழிகளும்வூ சீனம், உயீசூ சீனம், கீழை யாங்சீ மாண்டரின், மின் நான் (கங்னான் மற்றும் பிங்யாங் வட்டங்களில்)
ஐஎசுஓ 3166 குறியீடுCN-33
GDP (2014[2])CNY 4.0153 டிரில்லியன்
US$ 650 பில்லியன் (4வது)
 • per capitaCNY 73,152
US$ 11,914 (5வது)
HDI (2010)0.744[3] (high) (5வது)
இணையதளம்www.zj.gov.cn
செஜியாங் மாகாணம்
சீன மொழி 浙江
PostalChekiang
Literal meaning"Zhe River"

சொற்பிறப்பியல்

தொகு

செஜியாங் மாகாணத்தின் பெயர் ஜீ ஆற்றின் ( 浙江 , Zhe Jiang) பெயரில் இருந்து தோன்றியது. கிய்யண்டங் ஆற்றின் பழைய பெயர் ஜீ ஆறு ஆகும். இது மாகாணத்தின் தலைநகரான காங்சூவை கடந்து பாய்கிறது.

நிலவியல்

தொகு

செஜியாங் மாகாணம் பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்டது. இதன் மொத்த பரப்பளவில் சுமார் 70% ஆகும். மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரம் ஹுவாங்மவோஜின் மலையாகும் இது 1,929 மீட்டர் ( 6.329 அடி) உயரம் கொண்டது. பள்ளத்தாக்குகளும் சமவெளிகளும் கடலோர பகுதிகளிலும் ஆற்றுப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. மாகாணத்தின் வடக்குப்பகுதி யாங்சே வடிநிலப்பகுதியின் தெற்கில் அமைந்து காங்சூ ஜியாசிங், ஹுசூ ஆகிய நகரங்களை உள்ளடக்கிய சமவெளிப்பகுதியாகும்.

இங்கு குளிர்காலம் என்பது குறைந்த காலமே நிலவுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலை 15 முதல் 19 °செ (59 முதல் 66 °பாரங்கீட்), சராசரி சனவரி மாத வெப்பநிலை 2 முதல் 8 °செல்சியஸ் (36 முதல் 46 °பாரங்கீட்), சராசரி சூலை வெப்பநிலை 27 முதல் 30 °செல்சியஸ் (81 முதல் 86 °பாரங்கீட்). ஆண்டு மழையளவு 1,000 முதல் 1,900 மிமீ (39 இருந்து 75 அங்குலம்). இங்கு கோடைக்காலத்தில் பெருமளவு மழை பொழிகிறது.

பொருளாதாரம்

தொகு

இந்த மாகாணம் பாரம்பரியமாக "மீன் மற்றும் அரிசி நிலம்" என அழைக்கப்பட்டது. இதன் பெயருக்கு ஏற்றவாறு இங்கு நெல் சாகுபடி தொடர்ந்து முதன்மையான பயிராக விளங்குகிறது. இதற்கடுத்து கோதுமை விளைகிறது. மீன்வளம் பெரிய அளவில் உள்ளது. இங்கு விளையும் முக்கிய பணப்பயிர்கள் சணல் மற்றும் பருத்தி ஆகும். செஜியாங் மாகாணத்தின் சிறுநகரங்களில் பட்டு போன்ற பொருட்கள் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

ஹான் சீனர் பெரும்பான்மையினராக உள்ளனர். மேலும் ஹான் துணைப்பிரிவு மக்களான சீன வட்டார மொழியான வூவைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். சிறுபான்மை இனமக்கள் 400,000 பேர் உள்ளனர். இதில் சுமார் 200,000 பேர் ஷி இனமகக்கள், சுமார் 20,000 பேர் ஊய் மக்கள் ஆவர்.

சமயம்

தொகு

செஜியாங் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் (தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளன. 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 23.02% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 2.62% மக்கள் கிருத்துவர்கள் ஆவர் 2004இல் 3.92% என்ற விழுக்காட்டில் இருந்து குறைந்து போய் உள்ளனர்..[4] மக்கள் தொகையில் 74.36% பேர் சமயம் பற்றிய விவரங்களைக் கொடுக்கவில்லை இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்தமதம், கன்பூசிம், தாவோ மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்களாகவோ இருக்கலாம்.

மேற்கோள்

தொகு
  1. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "2013年浙江省国民经济和社会发展统计公报" (in Chinese). Zhejiang Provincial Statistic Bureau. 2014-02-26. Archived from the original on 2014-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "《2013中国人类发展报告》" (PDF) (in சீனம்). United Nations Development Programme China. 2013. Archived from the original (PDF) on 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  4. China General Social Survey 2009, Chinese Spiritual Life Survey (CSLS) 2007. Report by: Xiuhua Wang (2015, p. 15)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஜியாங்_மாகாணம்&oldid=3930161" இலிருந்து மீள்விக்கப்பட்டது