யுவா விரைவுவண்டி
யுவா விரைவுவண்டி[1] (Yuva Express) ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி இருந்தபோது 2009-10 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் துரந்தோ அதிவேக விரைவு தொடருந்துடன் அறிமுகப்படுத்திய சிறப்பு வகை தொடருந்தாகும். நாட்டில் உள்ள இளைஞர்களுக்குக் குளிரூட்டப்பட்ட குறைந்த கட்டண பயண சேவையினை வழங்கும் நோக்கில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன்.
யுவா விரைவுவண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
நிகழ்நிலை | செயலில் |
முதல் சேவை | 2009 |
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | CC, 3AC, 2AC |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | ஐ சி எப் அடுக்கு |
பாதை | Indian Gauge 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே |
வரவு செலவு திட்டத்தின் போது, ஹவுரா மற்றும் மும்பைக்கு இடையே இரண்டு ரயில்கள் இயக்க தேர்வு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இது இடைநில்லா சேவையாக இயக்க வேண்டும் என்று கருதப்பட்டது, பின்னர் இடை நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இரயிலின் அறுபது சதவீத பயணச்சீட்டுகள் மாணவர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்கள் மற்றும் 18 - 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் பெற, விரும்பும் பயணி வயது/வருமான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யும் போது இந்த ஆவணங்களின் நகல் தரப்பட வேண்டும். அதே நேரத்தில் பயணத்தின்போது பயணச்சீட்டு சோதனையின் போது பயணச்சீட்டு சோதனை ஊழியர்களால் சரிபார்ப்புக்காக இரண்டாவது தொகுப்பு எடுத்துச் செல்லப்பட வேண்டும். முன்னதாக ஏசி நாற்காலி பயண வசதி மட்டுமே இருந்தது, பின்னர் ஏசி 2 அடுக்கு மற்றும் ஏசி 3 அடுக்கு படுக்கை வசதி சேர்க்கப்பட்டது.
செயலில் உள்ள சேவைகள்
தொகுரயில் எண். | ரயில் பெயர் | தூரம் | அதிர்வெண் | மண்டலம் |
---|---|---|---|---|
12247/12248 | ஹஸ்ரத் நிஜாமுதீன் - பாந்த்ரா முனைய யுவா எக்ஸ்பிரஸ் | 1,367 km (849 mi) | வாராந்திர | மேற்கு ரயில்வே |
செயலற்ற சேவைகள்
தொகுரயில் எண். | ரயில் பெயர் | தூரம் | அதிர்வெண் | மண்டலம் |
---|---|---|---|---|
12249/12250 | ஹவுரா - ஆனந்த் விஹார் முனைய யுவா எக்ஸ்பிரஸ் | 1,438 km (894 mi) | வாராந்திர | கிழக்கு ரயில்வே |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://articles.economictimes.indiatimes.com/2013-01-06/news/36173918_1_yuva-trains-tier-coaches-ac-3
- http://www.indianexpress.com/news/yuva-express-on-track-cheaper-travel-for-students-jobless-youth/566776/
- http://www.indianexpress.com/news/uncomfortable-chair-cars-keep-youth-away-from-yuva-trains/948376/
- https://web.archive.org/web/20140922092521/http://www.indianrail.gov.in/doc/Speech_English_2009-10.pdf