உ. லெ. மு. நௌபர்
உதுமான் லெப்பை முஹம்மட் நௌபர் (யு.எல்.எம். நௌபர், (ஏப்ரல் 19, 1951 இவர் ஓர் உளவளத்துறை (சீர்மியம்) நிபுணரும், உளவியல்சார் எழுத்தாளருமாவார்.
யு. எல். எம். நௌபர் | |
---|---|
பிறப்பு | (ஏப்ரல் 19, 1951 கண்டி, உடத்தலவின்னை |
அறியப்படுவது | உளவளத் துறை |
சமயம் | இசுலாம் |
பெற்றோர் | உதுமான் லெப்பை சுலைஹா பீ.பீ |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇலங்கை கண்டி மாவட்டத்தில் உடத்தலவின்னை எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட உதுமான் லெப்பை சுலைஹா பீ.பீ. தம்பதியினரின் புதல்வரான முஹம்மட் நௌபர் உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, மாத்தளை புனித தோமையர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப்பட்டதாரியான இவர், உளவியல்துறையில் சிறப்பு டிப்ளோமா பெற்றவர். ஐக்கிய இராச்சிய விகன்வி வளாகத்தில் உளவியல்சார் அதி சிறப்புப் பட்டம் பெற்றுள்ளவர். இவரின் மனைவி மப்ரூஹா. பிள்ளைகள் பாத்திமா நஸ்மினா, முஹம்மட் நுஸ்ரி, அஹமட் நஜாட்.
தொழில் முயற்சி
தொகு1973ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியில் இலிகிதராக சேவையில் இணைந்த இவர், பதவி உயர்வு பெற்று 2002ம் ஆண்டில் சுயவிருப்பில் ஓய்வுபெற்றார்.
எழுத்துத்துறை ஈடுபாடு
தொகுபேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்திலே எழுத்துத்துறையில் ஈடுபடலானார். ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு அறிக்கைகள் போன்ற துறையில் இவரின் ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்ற இவர், பாடசாலை உயர்தர மாணாக்கரின் உளவியல்சார் அடிப்படையில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை சுயமாகவும், மொழிபெயர்த்தும் எழுதியுள்ளார்.
வெளியிட்ட நூல்கள்
தொகு- 'உளவியல்சார் உளவளத்துறை அணுகுமுறை' (பிரபல உளவியலாளர் ரிட்லி ஜயசிங்க அவர்களின் சிங்கள நூல் மொழிபெயர்ப்பாகும்.) மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன.
- 'உச்சியில் உருகிய மானிட காருண்யம்'. (பிரபல எழுத்தாளர் ஜோன்வூத் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பாகும்.)
- ஜனசக்தி.
பெற்ற விருதுகள்
தொகு- ஐக்கிய இராச்சிய விகன்பி பல்கலைக்கழக திறமை மாணவர் விருது (2008)
- இன ஐக்கியத்திற்கான ஒன்றியத்தின் உளவளத்துறை கௌரவ விருது. (2008)
- இலங்கை மத்திய வங்கி சிறப்பு விருது. (1998)