யூக்ரோயிட்டு

ஆர்சனேட்டு கனிமம்

யூக்ரோயிட்டு (Euchroite) என்பது Cu2AsO4OH·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யூக்ரோயிட்டு கனிமம் நீரேற்றப்பட்ட தாமிரம் ஆர்சனேட்டு ஐதராக்சைடு கனிமமாகக் கருதப்படுகிறது. நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் பளபளப்பான பச்சை நிறம் முதல் மரகதப் பச்சை நிறம் வரையிலான நிறங்களில் இது காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 3.5–4.0 என்ற அளவில் கடினத்தன்மை கொண்டுள்ளது. இதன் ஒப்படர்த்தி 3.39–3.45 ஆகும். முதன்முதலில் 1823 ஆம் ஆண்டில் சுலோவாக்கியாவின் இயூபிடோவாவில் யூக்ரோயிட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

யூக்ரோயிட்டு
Euchroite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுCu2AsO4OH·3H2O
இனங்காணல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்

பன்னாட்டு கனிமவியல் சங்கம் யூக்ரோயிட்டு கனிமத்தை Euc[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூக்ரோயிட்டு&oldid=4130634" இலிருந்து மீள்விக்கப்பட்டது