யூத்திகு (ஆங்கில மொழி: Eutychus) என்பவர் துரோவா நகரினைச்சேர்ந்த இளைஞர் ஆவார். இவர் பவுல் பேசுவதைக்கேட்க வந்தோருள் ஒருவர். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது இவர் அயர்ந்து தூங்கியதால் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார். அங்கு இருந்தோர் இவரை பிணமாகத் தூக்கி எடுத்தார்கள்.[1] பவுல் கீழே இறங்கி வந்து அவர் மீது படுத்து அணைத்துக்கொண்டு, "அமளியை நிறுத்துங்கள்: இவர் உயிரோடுதானியிருக்கிறார்" என்று கூறினார். இந்த நிகழ்வு புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலில் 20:9-12இல் விவரிக்கப்படுள்ளது..

பவுல் யூத்திகுவை உயிர்பெற்றச்செய்தல், 1728.

இந்த நிகழ்வின் விவரிப்பில் இவர் இறந்தாரா அல்லது மயக்கமடைந்தாரா என்பது குறித்து மொழிபெயர்ப்பாளரிடையே ஒத்த கருத்தில்லை.[2][3]

யூத்திகு என்னும் பெயருக்கு ஆகூழ் என்பது பொருள்.

இந்தநிகழ்வு ஓமரின் கதைகளில் குறிப்பாக ஒடிசியில் வரும் நிகழ்வோடு அதிகம் ஒத்திருப்பதால் இதன் நம்பகத்தன்மையினை பலர் கேள்விக்குள்ளாகியுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Arndt, William & Gingrich, F. W. (1967), Greek-English Lexicon of the New Testament (University of Chicago Press).
  2. The Case of Eutychus
  3. Eutychus (WebBible Encyclopedia)
  4. Luke's Eutychus and Homer's Elpenor

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத்திகு&oldid=3351640" இலிருந்து மீள்விக்கப்பட்டது