யூபம் (தூண்)
யூபம் என்பது கொடிக்கம்பம்.
இக்காலத்தில் கோயில்களில் நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போல நடப்படுவது.
வேள்வி செய்யும் இடங்களிலும், வெற்றி பெற்ற களங்களிலும் இது நடப்படும்.
நெட்டிமையார் என்னும் புலவர் முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனைப் பாடும்போது நீ நாட்டிய வெற்றித்தூண் அதிகமா, வேள்வித்தூண் அதிகமா எனக் கூறி வியக்கும்போது அந்தத் தூண்களை யூபம் எனக் குறிப்பிடுகிறார். [1]
கருங்குழலாதனார் என்னும் புலவர் சோழன் கரிகாற் பெருவளத்தான் போர்களத்திலேயே வேதவேள்வி யூபநெடுந்தூண் நாட்டியது பற்றிக் குறிப்பிடுகிறார். [2]
ஏழாம் பதிற்றுப்பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேரமன்னன் வெற்றிக்களத்தில் யூபம் நட்டது பற்றிய குறிப்பு உள்ளது. [3]