யூரிஸ்தியஸ்

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் அரசர்

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும், யூரிஸ்தியஸ் ( Eurystheus) என்பவர் ஆர்கோலிடில் உள்ள மூன்று மைசீய கோட்டைகளில் ஒன்றான டிரின்ஸின் மன்னராக இருந்தவர். இருப்பினும் ஹோமர் மற்றும் யூரிப்பிட்ஸ் உள்ளிட்ட பிற ஆசிரியர்கள் இவரை ஆர்கோஸின் மன்னராக குறிப்பிட்டுள்ளனர்.

ஹெராக்கிள்ஸ் எரிமாந்தியன் காட்டுப்பன்றியை பிடித்துவரும்போது யூரிஸ்தியஸ் பித்தளை சேமிப்பு கலத்துக்குள் மறைந்து கொள்ளும் காட்சி. கி.மு. 510 காலத்திய சாடியில் வரையப்பட்ட கறுப்பு சிவப்பு கலைப்பணி

குடும்பம்

தொகு

யூரிஸ்தியஸ் ஸ்டெனெலஸ் மற்றும் நிசிபே ஆகியோரின் மகன் ஆவார். மேலும் இவர் பெர்சியஸின் ஹீரோவின் பேரனும் ஆவார். இவரது எதிரியாக ஹெராக்கிள்ஸ் இருந்தார். இவர் ஆம்பிடாமாஸின் மகள் ஆண்டிமேக்கை மணந்தார்.

யூரிஸ்தியஸ் ஹெராக்கிளிசின் உறவினர் ஆவார். [1]

தொன்மவியல்

தொகு

ஹெராக்குலிசின் பணிகள்

தொகு

ஹீராவிற்கும் ஜீயசுக்கும் இடையில் ஒரு போட்டி நடைபெற்றது. இதில் யூரிஸ்தியஸ் ஹீராவின் ஆதரவு பெற்ற வேட்பாளராகவும், இவருக்கு எதிராக ஹெராக்கிள்சும் இருந்தார். [2] இந்த போட்டியின் பகுதியாக யூரிஸ்தியசால் அளிக்கப்படும் பன்னிரு வேலைகளை ஹெராக்கிள்ஸ் முடிக்கவேண்டும் என்பதாகும். அவருக்கு விதிக்கபட்ட பணிகளை எவ்வாறு செய்தார் என்பதை எர்க்குலிசின் பன்னிரு வேலைகள் என்ற கட்டுரையில் தனித்தனி அத்தியாயங்களாக விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால் ஹெராக்கிள்ஸ் வெல்ல வேண்டிய எதிரிகள் அனைவருடனும் ஹீரா இணைக்கப்பட்டுள்ளார். [3]

குறிப்புகள்

தொகு
  1. Powell, Barry B. (2015). Classical myth. Pearson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-292-06614-1. இணையக் கணினி நூலக மைய எண் 897091291.
  2. See Carl A.P. Ruck and Danny Staples, The World of Classical Myth (1994) VII. "Herakles: Making the New Olympia", pp.163-202.
  3. Walter Burkert, Greek Religion (1985) p. 210: "Heracles seems to carry Hera's name in his own, as if Hera were his fame (kleos), yet all we ever hear is that from beginning to end,this jealous wife of Zeus persecutes her step-son with unrelenting hatred." For Hera's connection with each of Heracles' opponents, see under the individual Labours.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரிஸ்தியஸ்&oldid=3066853" இலிருந்து மீள்விக்கப்பட்டது