யெசெ சனாகன்
யெசெ சனாகன் (Jesse Shanahan) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் ஊனமுற்றோருக்கான செயல்முனைவாளரும் ஆவார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் அணுகுதிறம், ஊனமுற்றநிலைப் பணிக்குழுவினை உருவாக்கிய இணைநிறுவனர் ஆவார்.[1]
யெசெ சனாகன் Jesse Shanahan | |
---|---|
கல்வி | வர்ஜீனியா பல்கலைக்கழகம், வெசுலியன் பல்கலைக்கழகம் |
அமைப்பு(கள்) | அமெரிக்க வானியல் கழகம் |
அறியப்படுவது | ஊனமுற்றநிலைச் செயல்முனைவு, எகிலர்சு-தானிலோசு நோய்த்தொகை |
கல்வியும் ஆராய்ச்சியும்
தொகுஇவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டப்படிப்பின்போது அரபு மொழியியலும் மெய்யியலும் படித்துள்ளார்.[2] இவர் தன் இளவல் படிப்பின் இறுதியில் வானியற்பியலுக்கு மாறி அதில் முதுவர் பட்டம் பெற முடிவெடுத்துள்ளார். இவர் வெசுலியன் பல்கலைக்கழகத்தில் தன் கல்வியை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்துள்ளார். பிறகு தான் நோய்வாய்பட்டதாலும் தொடர்ந்து சந்தித்த வன்கொடுமையாலும் படிப்பை இடைவிட நேர்ந்துள்ளது.[2][3][4] என்றாலும் இவர் சாந்தீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் புரூக் சிம்மசுடன் இணைந்தும்ழோனிவர்சு நிறுவன இலிண்ட்oட்டுடன் இணைந்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.[5] இவருடைய முதன்மையான ஆராய்ச்சி செயல்முனைவான பால்வெளியாக்கக் கருவிலும் அது உருவாக்கும் ஓம்பல் பால்வெளிகளிலும் குறிப்பாக அவற்றின் கதிர்நிரல் பதிவுகளில் கவனம் குவிக்கிறது.[6] இவர் பூசூ ஆல்லன் ஆமில்டன் நிறுவனத்தில் தரவு அறிவியலாளராகப் பணிபுரிவதோடு அங்கே அறவில்லையும் செயற்கை அறிதிறனையும் மாந்தப்பண்பு வெறெடுக்கும் பயன்பாடுகளில் புலமை பெற்றுவருகிறார்.[7]
ஊனமுற்றநிலை
தொகுவலியை உருவாக்கி இயங்குதிறனைக் குறைக்கும் மரபியல் இணப்பிழைய நோயான எகிலர்சு- தானிலோசு நோய்த்தொகையால் இவர் பீடிக்கப்பட்டார்[2]
ஊனமுற்ற அறிவியலாளருக்கான தங்கள் வாய்மொழி வரலாற்றுத் திட்டத்தின்கீழ் இவரை அறிவியல் வரலாற்று நிறுவனம் நேர்காணல் பேட்டி எடுத்துள்ளது.[8]
எழுத்துப்பணி
தொகுசனாகன் போர்பேசு இதழில் மொழியியல், வானியற்பியல் பற்றி போர்பேசு இதழிலும்,[6][8] தன் சொந்த ஊடகப் பக்கத்திலும் தொடர்ந்து பதிவு செய்கிறார்.[9]> இவரது சமூக ஊடகப் பதிவுகள் சிலவேளைகலில் ஊனமுற்றநிலை, திறன் மேம்பாடு பற்றிய கட்டுரைகளில் உள்ளடக்கமாகின்றன.[10][11] இவர் ஊனமுற்றாநிலையும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களும் எனும் பெயரில் ஒரு வலைப்பதிவையும் உருவாக்கி அதில் அறிவியலில் ஊனமுற்றநிலை சார்ந்த பட்டறிவுகளைப் பகிர்கிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Meet the Creator of #DisabledandSTEM". 500 Women Scientists (in அமெரிக்க ஆங்கிலம்). May 7, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ 2.0 2.1 2.2 Alaina G. Levine (May 2018). "Profiles in Versatility". APS News. பன்னாட்டுத் தர தொடர் எண் 1058-8132.
- ↑ Pain, Elisabeth (2016). "How to (seriously) read a scientific paper". Science. doi:10.1126/science.caredit.a1600047. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075.
- ↑ Institute, Science History (2018-09-19). "When we interviewed @Enceladosaurus for our Scientists with Disabilities #OralHistory project, she described some of the microaggressions she encountered while working on her PhD. #MarginSci #DisabledandSTEMpic.twitter.com/9WBPFvEQCw". @SciHistoryOrg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
- ↑ "Jesse Shanahan". Jesse Shanahan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ 6.0 6.1 "Jesse Shanahan". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ "Jesse Shanahan". LinkedIn.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 8.0 8.1 Torres, Roberto (2018-09-06). "This project is tracking the oral history of STEM researchers with disabilities". Technical.ly Philly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Jesse Shanahan". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ Romano, Andrea (2015-11-11). "Target's on the Naughty List this year for insensitive 'OCD' Christmas sweater". Mashable (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ Barasch, Alex (2018-03-14). "Stephen Hawking's Disability Activism Was As Invaluable As his Science". Slate Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.