யெர்ரகலுவா ஆறு

யெர்ரகலுவா ஆறு (Yerrakaluva) என்பது இந்தியாவில் தெலங்காணா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்திற்கும் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கும் இடையே ஓடும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆற்றுப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.[1] ஒவ்வொரு ஆண்டும் பல கிராமங்கள் இந்த ஆற்று வெள்ளத்தினால் தங்கள் பயிர்களை இழக்கின்றன. மேலும் பல குடும்பங்கள் தமது உடமைகளையும் இழக்க நேருகின்றன.

யெர்ரகலுவா ஆறு மற்றும் இதன் அருகிலுள்ள கொள்ளேறு ஏரி வடிநீர் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மொகுல்தூர் அருகே வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன் உப்புதேரு ஆற்றில் கலக்கிறது. மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகூடம் மண்டலத்தில் உள்ள கொங்குவாரிகுடம் கிராமத்திற்கு அருகே யெர்ரகலுவா செல்கிறது.

யெர்ரகலுவா நீர்த்தேக்கம் தொகு

யெர்ராகலுவ நீர்த்தேக்கம்[2] 1976-ஆம் ஆண்டில் இந்த ஆற்றின் குறுக்கி கட்டப்பட்டது. யெர்ரகலுவா நீர்த்தேக்கத் திட்டம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மண்நிரப்பு அணையிலானது.

ஜங்காரெட்டிகுடம், காமவரபுகோட்டா, துவாரகா திருமலை, நல்லஜெர்லா மற்றும் தாடேபள்ளிகுடம் மண்டலங்களில் உள்ள 22 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாசனம் பெற உத்தேசிக்கப்பட்ட ஆயக்கட்டு 9,996 ஏக்கர் ஆகும். அனந்தப்பள்ளி மற்றும் நந்தமுரு இடையே மிதமான வெள்ளப்பெருக்கின் போது சுமார் 8,094 ஏக்கர் விளை நிலங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. திட்டத்தின் கூறுகள்:

  • 2.73 கி.மீ. நீளத்திற்கு மண் அணை
  • 12.00 மீ x 5.00 மீ அளவுள்ள 4 மதகுகள் கொண்ட மிகை நீர் கட்டுப்படுத்தி மற்றும் ஏற்றி இறக்கும் வசதியுடனான தடுப்பு
  • மண் அணையின் இடது மற்றும் வலது தலை மதகுகள் முறையே 0.40 கி.மீ. மற்றும் 2.20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு 9,996 ஏக்கர் அடங்கும். இடது பிரதான கால்வாயில் 2,023 ஏக்கரும் வலதுபுறத்தில் 1,012 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றது. மார்ச் 2010 நிலவரப்படி, கொங்குளகுடம் திட்டத்திலிருந்து நந்தமுரு கால்வாய்ப் பாலம் வரை 8095 ஏக்கர் பாசன வசதி பகுதி உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Watershed map of east flowing rivers between Godavari and Krishna basins" (PDF). பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
  2. "Yerrakalva Medium Irrigation Project JI00171". பார்க்கப்பட்ட நாள் July 9, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெர்ரகலுவா_ஆறு&oldid=3799671" இலிருந்து மீள்விக்கப்பட்டது