யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி
யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி (Johann Heinrich Pestalozzi, 1746 - 1827) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.
யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி | |
---|---|
பிறப்பு | 12 சனவரி 1746 சூரிக்கு |
இறப்பு | 17 பெப்பிரவரி 1827 (அகவை 81) Brugg |
படித்த இடங்கள் | |
வேலை வழங்குபவர் | |
இவரது நூல்கள்
தொகு- எனது அனுபவங்கள்
- அன்னப் பறவையின் கீதம்
- ஒரு துறவியின் மாலைப்பொழுது
- லெனோர்ட்டும் யேர்ரூட்டும்
- கிறிஸ்தோப்பரும் எலியாவும்
- இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை
- யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்