யோகினி கோயில், ஜபல்பூர்
யோகினி கோயில் அல்லது 64 யோகினி கோயில் (Chausath Yogini Temple, Jabalpur) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை ஆற்றின் கரையில் அமைந்த பேதாகாட் எனும் கிராமாத்தில் உள்ள [1] சிறு குன்றின் உச்சியில் கட்டப்பட்டது.[2][3] இக்கோயில் சாக்த சமயத்தின் துர்கை மற்றும் 64 யோகினி தேவதைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.[4]
காலச்சூரி பேரரசர்களால் பொ.ஊ. 10ம் நூற்றாண்டில் இக்கோயில் கஜுராஹோ கட்டிட அமைப்பில் கட்டப்பட்டது.[5]
தில்லி சுல்தானகம் மற்றும் முகலாய ஆட்சியில் இக்கோயிலின் சிற்பங்கள் சிதைக்கப்பட்டது.[3]
கோயில் அமைப்பு
தொகுயோகினி கோயில் ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்றின் மீது 150 படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது.[4][5] இக்கோயில் வளாகம் வட்ட வடிவ மதில் சுவர்களுடன் கூடியது. கோயில் கருவறையில் துர்கை அம்மனின் உருவச் சிலையும்; வட்ட வடிவ கோயில் மதில் சுவரில் 64 யோகினிகளின் சிற்பங்கள் உள்ளது. 64 யோகினி சிற்பங்களுக்கு நடுவில் நந்தி வாகனத்தில் பார்வதி தேவியுடன் சிவபெருமான் அமர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது.[5]
படக்காட்சிகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bhedaghat
- ↑ "Indian Temples and Iconography: Chaunsat yogini temple, Bheraghat Jabalpur". indiatemple.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ 3.0 3.1 "Chausath Yogini Temple, Jabalpur: A Must Visit Heritage Site". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ 4.0 4.1 "Chausat Yogini Temple - Jabalpur Directory - Chausat Yogini Temple -Jabalpur Online Guide - Madhya Pradesh (MP), India". jabalpurdirectory.com. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ 5.0 5.1 5.2 "Chausath Yogini Temple, Jabalpur, India | Life is a Vacation". lifeisavacation.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
வெளி இணைப்புகள்
தொகு