யோகினி ஜோக்லேகர்

யோகினி ஜோக்லேகர் (6 ஆகஸ்ட் 1925 - 1 நவம்பர் 2005) இந்தியாவைச் சேர்ந்த மராத்தி மொழி எழுத்தாளரும் கவிஞரும் செவ்வியல் பாரம்பரிய பாடகருமாவார். [1] [2]

யோகினி ஜோக்லேகர்
பிறப்பு(1925-08-06)6 ஆகத்து 1925
மகாராட்டிரம்
இறப்பு2005 (அகவை 79–80)
புனே, மகாராட்டிரம்
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்

50 நாவல்கள், 39 சிறுகதைத் தொகுப்பு, குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்பு என மொத்தம் 116 நூல்களை எழுதியுள்ள இவர், முறையாக பாரம்பரிய இசையை பாஸ்கர் புவா பக்கலெ மற்றும் ராம் மராத்தே ஆகியோரிடமிருந்து கற்று தேர்ந்துள்ளார்.

எழுத்தாளர் வாழ்க்கை

தொகு

யோகினி 1925 ஆம் ஆண்டில் மகாராட்டிராவின் புனேவில் பிறந்தவர். தனது பள்ளிக் கல்வியை முடித்து கலைப்பிரிவில் இளங்கலை படிப்பை முடித்து 1948 ஆம் ஆண்டிலிருந்து 1953 ஆம் ஆண்டு வரையில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். "இராஷ்ட்ரசேவிகா சமிதி" என்ற அமைப்பு மூலம் பல சமூகப் பணிகளைச் செய்துள்ள இவர், 116 புத்தகங்கள் எழுதிய்யுள்ளார். இவரது இசைக்குருக்களான பாஸ்கர்புவா பகாலே பற்றிய "யா சம் ஹா" புதினமும் ராம் மராத்தே பற்றிய "இராம் பிரகார்" புதினமும் இவருக்கு நிறைய புகழையும் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது.

இவரது 8 வயதிலிருந்தே சங்கர் புவா அஷ்டேகரிடமும் பின்னர் ராம் மராத்தேயிடமும் பாரம்பரிய இசைப்பாடலைக் கற்றுக்கொண்டதோடு சங்கீத்கலாநிதி ஆசிரியர் கிருஷ்ணராவ் புலம்ப்ரிகரிடமும் சில காலம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்றுள்ளார். இதன் அடிப்படையிலேயே மராத்தி திரைப்படமான "பஹிலி மங்லகௌர்" திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாகப் பாடியுள்ளார். [3]

எழுதிய புத்தகங்கள்

தொகு
  1. நிராகஸ் निरागस
  2. சிலாங்கன் शिलांगण
  3. குணசாதி குனிதரி कुणासाठी कुणीतरी
  4. ஜாக் जाग
  5. சைதன்யா चैतन्या
  6. சாக்சாத்கார் साक्षात्कार
  7. உமாலா उमाळा
  8. சிமகடே चिमखडे अर्थात बडबड गीते
  9. உபகாரம் उपहार
  10. ஸ்வாகா स्वाहा
  11. நாதபிரம்மம் नादब्रह्म
  12. பாய்குண पायगुण
  13. ஆஸ்வத் आस्वाद
  14. தகிஹண்டி दहीहंडी
  15. சர்யத் शर्यत
  16. ஸ்ரீ கணேசா ஶ்श्रीगणेशा
  17. நவி வாட் नवी वाट
  18. பாப்லெக் बापलेक
  19. அஷ்வத் अश्वत्थ
  20. சாருச்சி ஐ चारूची आई[4]

கட்டுரைகள்

தொகு
  1. ஷ்ரவன் [5]

எழுதப்பட்ட பாடல்கள்

தொகு
  1. மதுர் ஸ்வரலஹரி யா मधुर स्वरलहरी या
  2. சகே பாய் சங்கதே மீ सखे बाई सांगते मी
  3. ஹரிச்சி ஏகதாச் முரளி हरीची ऐकताच मुरली
  4. கி சாகர நீலாம்பர हे सागरा नीलांबरा [6]

வாழ்க்கை

தொகு

அவரது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தனது 80வது வயதில் நீண்ட காலமாக இருந்த நோயால் இறந்த இவரது நினைவாக, அவரது குடும்பத்தினர் தேவநாகரி யூனிகோட் எழுத்துருவான "அக்ஷரயோகினி"யை வெளியிட்டுள்ளனர். [7]

மேற்கோள்கள்

தொகு
  1. Yogini Joglekar
  2. Yogini Joglekar
  3. "Career". Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
  4. "Books by Yogini Joglekar". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  5. Shrawan
  6. Songs by Yogini Joglekar பரணிடப்பட்டது 2 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம்
  7. Death
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகினி_ஜோக்லேகர்&oldid=4108365" இலிருந்து மீள்விக்கப்பட்டது