யோகிமாதா பாறை ஓவியம்
யோகிமத்து (Yogimath) இந்தியாவின் மேற்கு ஒடிசா எல்லைப் பகுதியிலிருந்து 9 கிமீ தொலைவிலும், கலகண்டி மாவட்டத்தின் பவானிபட்னாவிலிருந்து 67 கிமீ தொலைவிலும் நுவபடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் அதன் கற்கால குகை ஓவியங்களுக்கு பிரபலமானது. யோகிமத் குகைகளின் பாறை மேற்பரப்பில் ஓவியங்கள் சிவப்பு வண்ணப்பூச்சு மூலம் வரையப்பட்டுள்ளன. மாடு, கன்று மற்றும் விவசாயத்திற்காக விலங்குகளை வளர்ப்பதைக் குறிக்கும் மனிதன் மற்றும் காளை போன்றவை மிக முக்கியமான படங்களாகும். இந்த இடத்தின் கடந்தகால மகிமை இன்னும் ஆராயப்படவில்லை. யோகிமத்து அருகே ரிசிபிடி என்ற மலை உள்ளது. தெளிவான எதிரொலிகளை உற்பத்தி செய்வதற்கான மலையாக இது நன்கு அறியப்பட்டதாகும். [1]
யோகிமாதா Yogimatha | |
---|---|
வகை | Hills |
அமைவிடம் | ரிசிபித்து, ராய்காவுன்,காரியர், நுவாபடா, ஒடிசா |
அருகில் உள்ள நகரம் | காரியர் |
ஆள்கூற்றுகள் | 21°51.81′N 83°50.00′E / 21.86350°N 83.83333°E |
ஏற்றம் | 946 அடிகள் (288 m) |
நிர்வகிக்கும் அமைப்பு | ஒடிசா அரசு |
உரிமையாளர் | வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் குடியிருப்பு இடமாக பயன்படுத்தப்பட்டது |
இணையதளம் | https://nuapada.nic.in |
வரலாறு
தொகுகலை பாணியின் அடிப்படையில், மையக்கருத்துகளின் வண்ண அமைப்பானது இந்த ஓவியங்கள் இடைக்காலம்-செம்புக் காலத்தைச் சேர்ந்தவைகளாக தேதியிடப்படலாம். காலாகண்டியின் குடகண்டியில் உள்ள ஓவியங்கள் கிமு 15 ஆயிரம் ஆண்டுகள் காலத்திற்கு முன் வைக்கப்படலாம். ஆனால் யோகிமத்துதில் உள்ளவை ஓரளவு பிந்தைய காலகட்டத்திற்கு உட்பட்டவையாகவும் கிமு 10 ஆயிரம் ஆண்டுகள் காலத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம்.[2] திரிசூலம், மங்கலக்குறிகள் போன்ற சடங்குக் குறியீடுகள் இந்த ஓவியங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றன. இப்பாறை ஓவியங்கள் ஆரம்பகால வரலாற்று காலத்தின் ஒரு வண்ணம் மற்றும் இரு-வண்ண ஓவியங்களை வெளிப்படுத்துகின்றன. நுவாடா மாவட்டத்தின் ஒரே புகழ்பெற்ற பாறை ஓவியத் தளம் இதுவாகும். அடர் சிவப்பு நிற ஒரே வண்ணமுடைய ஓவியங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. மனித உருவம் போன்ற குச்சி, கூம்புடன் அல்லது கூம்பு இல்லாமல் கால்நடைகள், செறிவான வட்டங்கள், வளைவு, வடிவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரையப்பட்ட வட்டங்கள் மற்றும் மேளங்கள் போன்ற வடிவங்கள். இங்கு வரையப்பட்டுள்ளன.
ஆய்வு
தொகுகிரானைட் மலை ரிசிபித் ஒரு கற்பாறையின் சாய்ந்த மேற்பரப்பில் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களை பாதுகாக்கிறது. இந்த வரலாற்றிடம் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு யே.பி சிங் தியோவால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் முனைவர் சுப்ரத்குமார் பிரசுட்டி முதன்முறையாக இந்தியாவின் பழைய எழுத்து யோகிமாதாவின் பாறை ஓவியத்தை [3]அடையாளம் கண்டார். யோகிமாதா பாறை ஓவியத்திலிருந்து 'கா' மற்றும் 'ஓ' (தா) எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஓவியம் நான்கு விலங்குகளுடன் ஒரு நபர் இருப்பது போலவும் மற்றும் சில எழுத்துக்களையும் கொண்டுள்ளது. [4] முனைவர் பிரசுட்டியின் கூற்றுப்படி, அந்த ஓவியம் "காயிதா" போன்ற ஒரு வார்த்தையை உருவாக்கியது காயிதா என்பது தற்போது ஆங்கிலத்தில் 'கோதா' அல்லது 'குழு' என்ற மிகவும் பிரபலமாக அறியப்படும் ஓர் ஓடியா சொல்லாகும். இந்த ஓவியம் இந்த எழுத்துக்களுடன் நெருக்கமாக தொடர்புடையதாக கருதப்பட்டுகிறது. இந்த எழுத்துக்கள் விக்ரம்கோல் கல்வெட்டு, தாவுலி மற்றும் சாவுகதா கல்வெட்ட்டுகளில் காணப்பட்டும் அசோகர் கால எழுத்துகளை ஒத்திருக்கிறது. பிராமி- எழுத்துகள் என்ற பெயரிடப்பட்ட இந்திய எழுத்தின் பழமையான வடிவமாக இவை இருக்கலாம் என்று கருதினார், ஒடியா மொழி மற்றும் எழுத்துகளின் தோற்றம் இங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் இவர் கருதினார்.[5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rock Art Shelter of Jogimath" (PDF). INDIRA GANDHI NATIONAL CENTRE FOR THE ARTS.
- ↑ "Districts Gazetteers(Kalahandi)" (PDF). Government of Odisha. p. 36.
- ↑ Prusty, Subrat Kumar (2007). Odia Bhasa Sahitya Parichaya (1st ed.). Cuttack: A.K. Mishra publishers Pvt. Ltd, Satyabhama, Roxy lane, Badambadi, Cuttack-0,Odisha. p. 7-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-921347-1-0.
- ↑ CLASSICL ODIA IN HISTORICAL PERSPECTIVE. Sanskruti Bhawan, Bhubaneswar-14, Odisha: Odisha Sahitya Akademi. 2015. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7586-198-5.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ Prusty, Subrat Kumar (2010). BHASA O JATIYATA (1 ed.). Bidyadharpur, Jajpur: with finical assistance by Dept. of Culture, Govt. of Odisha. p. 51-52.
- ↑ Debi Prasanna Pattanayak (2013). CLASSICAL ODIA (1st ed.). Maitri Vihar, Chandrasekharpur, Bhubaneswar, Odisha: KIIS Foundation, New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-925616-3-9.