பிராமிய குடும்பம்

பிராமிய குடும்பம் என்பது தெற்காசியா, தென்கிழக்காசியா, திபெத், மங்கோலியா, மஞ்சூரியா ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பிராமியில் இருந்து உருவான அபுகிடா எழுத்துமுறைகளின் குடும்பத்தை குறிக்கும். இந்த எழுத்துமுறைகளை பிராமிய எழுத்துமுறைகள் என்று குறிப்பிடுவர்.

கி.பி 11ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழ வட்டெழுத்து கல்வெட்டு. வட்டெழுத்து நேரடியாக தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது

வரலாறு

பிராமிய எழுத்து முறைகள், பண்டைய இந்திய எழுத்து முறையாக பிராமியில் இருந்து தோன்றியனவாகும். இந்த பிராமி எழுத்து முறையின் தோற்றத்தில் அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஒரு சாரார் இது அரமேய எழுத்து முறையில் இருந்து தோன்றியது என்றும், இன்னொரு சாரார், சிந்துசமவெளி எழுத்து முறையில் இருந்து தோன்றியிருக்கக்கூடும் என்றும் வாதிடுகின்றனர்.

இந்தக் குடும்பத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்து முறை தேவநாகரி ஆகும். இவ்வெழுத்து முறை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்தி, கொங்கணி, மராத்தி , நேபாளி, நேபாள் பாஸா , சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை எழுத பயன்படுத்தப்படுகிறது. வட பிராமி எழுத்து முறைகளுள் தேவநாகரியை போல் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்து முறை கிழக்கு நாகரி ஆகும். கிழக்கு நாகரி வங்காள மொழி, அசாமிய மொழி மற்றும் பிஷ்ணுபிரியா மணிப்பூரி ஆகிய மொழிகளை எழுத பயன்படுத்தப்படுகிறது. இதே போல் பிற இந்திய மொழிகளான ஒரியா, குஜராத்தி மொழிகளும் பிராமிய எழுத்து முறைகளையே கொண்டுள்ளன. ரஞ்சனா, பிரசலித், புஜிமோல் மற்றும் குர்முகி போன்ற எழுத்து முறைகளும் பிராமியை ஒட்டித் தோன்றியவையே ஆகும்

தென்னகத்தில் வழங்கப்பட்டு வந்த பிராமி திராவிட மொழியியலுக்கு ஏற்றார்போல் மாற்றம் கொண்டது. தென் பிராமியை வட்ட வடிவில் எழுதத் துவங்கினர். மேலும் திராவிட ஒலிகளுக்கான சில எழுத்துக்களும் தென் பிராமிய எழுத்து முறைகளின் சேர்க்கப்பட்டது. தற்கால தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துமுறையும் பழைய கன்னட எழுத்துமுறையில் இருந்து தோன்றின. தமிழகத்தில் தமிழ் பிராமி ஆரம்பகாலத்தில் தமிழை எழுதப் பயன்படுத்தப்பட்டது. இதில் இருந்து நேரடியாக வட்டெழுத்து முறை தோன்றியது. வட்டெழுத்தில் இருந்து தற்கால எழுத்து முறை தோன்றியது. மலையாள எழுத்து முறை பிராமிய எழுத்துமுறையான கிரந்த எழுத்து முறையில் இருந்து எழுந்தது.

இதே போல் பர்மிய மொழி, குமெர் மொழி(கம்போடிய மொழி), லாவோ மொழி, தாய் மொழி, ஜாவா மொழி, பாலி மொழி மற்றும் திபெத்திய மொழி ஆகியவையும் பிராமிய எழுத்து முறையில் எழுதப்பட்டாலும் அம்மொழிகளின் ஒலியியலுக்கிணங்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிராமிய எழுத்து முறையான சித்தம் பௌத்தத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இது மிகவும் புனிதமான எழுத்து முறையாகக் கருதப்படுகிறது, பல பௌத்த சூத்திரங்களும், மந்திரங்களும், சித்தம் எழுத்து முறையிலேயே உள்ளன. இன்றளவும் சித்தம் ஜப்பானில் பயன்பாட்டில் உள்ளது.

பொதுவான அம்சங்கள்

  • பிராமிய மெய்யெழுத்து வடிவங்களில் உள்ளார்ந்த உயிரெழுத்தை கொண்டிருக்கும். இது பொதுவாக ‘அ'கரம் ஆக இருப்பினும் வங்காளம் போன்ற சில மொழிகளில் காலப்போக்கில் நிகழ்ந்த ஒலியியல் மாற்றங்களினால் இது ‘ஒ'கரமாக திரிந்திருக்கிறது. இந்த உள்ளார்ந்த 'அ'கரத்தை நீக்க சில குறியீடுகள் பயன்படுத்தப்படும். தமிழில் புள்ளி பயன்படுவது போல.
  • பிற ஐரோப்பிய அரிச்சுவடிகளில் போல தனித்தனியாக உயிர் மற்றும் மெய் வடிவங்களை மட்டும் கொண்டிருக்காமல், உயிரெழுத்து, மெய்யெழுத்து மற்றும் உயிர்மெய்யெழுத்து வடிவங்கள் என மூன்று விதமான வடிவங்கள் காணப்படும்
  • மெய்யெழுத்து வடிவில் உயிர் ஒலிகளை குறிக்க மெய்யெழுத்துக்கு அருகில் உயிர்க்குறிகள் இடப்படும். உதாரணமாக் தமிழில் கால், கொம்பு,கொக்கி ஆகியவை பயன்படுவது போல
  • உயிர்மெய் வடிவங்கள் மேற்கூறியவாறு இந்த உயிர்க்குறிகள் மெய் வடிவத்தில் முன்னும் பின்னும் மேலும் கீழூம் என நால்புறமும் எழுத்துக்கும் மொழிக்கும் ஏற்றார்போல் இடப்பட்டு இருக்கும்.
  • பெரும்பாலான எழுத்துமுறைகளில் மெய்யெழுத்துக்கள் சேர்த்து எழுத சில சிறப்பு கூட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்படும். தமிழ் போன்ற சில பிராமிய எழுத்துமுறைகளுக்கு இது பொருந்தாது
  • மூக்கொலியாக்கத்தை குறிக்க அனுஸ்வரம் போன்ற குறியீடுகள் பயன்படுத்தப்படும். தமிழ் மூக்கொலியாக்கத்தை ஒரு மெய்யின் மெல்லின இன்வெழுத்தின் ஒற்றெழுத்தை இடுவதன் மூலம் மூக்கொலியாக்கத்தை செய்கிறது. சில மொழிகளில் இவ்விரண்டு முறைகளிலும் மூக்கொலியாகக்ம் செய்யப்படுகிறது.
  • மூச்சொலி மெய்கள்(ஹகரம் கலந்த மெய்கள்) உள்ள மொழிகளில் இவை தனி மெய் வடிவத்தின் மூலம் குறிக்கப்படும்.
  • இவ்வெழுத்த்துக்கள் பின்வாறாக அடுக்கப்பட்டிருக்கும்: உயிரெழுத்து தனியாகவும், மெய்யெழுத்துக்கள் க வர்கம், ச வர்கம், ட வர்கம், த வர்கம், ப வர்கம், இதர எழுத்துக்கள் என அடுக்கப்பட்டிருக்கும்ம்

பேராசிரியல் கேரி லெட்யார்டு என்பவர் கொரிய ஹங்குல் எழுத்துமுறை பிராமிய எழுத்துமுறையான மங்கோலிய பக்ஸ்பா எழுத்துமுறையில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இது நிரூபிக்கப்பட்டால் கொரிய எழுத்துமுறை கூட ஒரு வகையில் பிராமிய எழுத்துமுறையாக இனி கருதப்படும்

ஒப்பீடு

கீழ்க்கண்ட அட்டவனையில் பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய எழுத்துமுறைகள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் உச்சரிப்பு கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கத்தின் படியும் சர்வதேச உச்சரிப்பு அரிச்சுவடியின் படியும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணை முழுமையானது அல்ல சில எழுத்துக்கள் விடப்பட்டிருக்கலாம்.

மெய்யெழுத்துக்கள்

NLAC IPA தேவநாகரி கிழக்கு நாகரிi குர்முகி குசராத்தி ஒரியா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் சிங்களம் திபெத்தியம்
k k
kh  
g ɡ  
gh ɡʱ    
ŋ
c c
ch  
j ɟ
jh ɟʱ    
ñ ɲ
ʈ
ṭh ʈʰ  
ɖ  
ḍh ɖʱ    
ɳ
t  
th t̺ʰ
d  
dh d̺ʰ    
n n
n                  
p p
ph  
b b  
bh    
m m
y j
r r র/ৰ
r            
l l
ɭ   ਲ਼  
ɻ              
v ʋ  
ś ɕ ਸ਼  
ʂ  
s s
h h

உயிரெழுத்துக்கள்

உயிரெழுத்துக்களும் அவற்றின் இணையான 'க'கர உயிர்மெய்யெழுத்துக்களும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

NLAC IPA தேவநாகரி கிழக்கு நாகரி குர்முகி குஜராத்தி ஒரியா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் சிங்களம் திபெத்தியம்
a ə                
ā ɑː का কা ਕਾ કા କା கா కా ಕಾ കാ කා    
æ                                       කැ    
ǣ                                       කෑ    
i i कि কি ਕਿ કિ କି கி కి ಕಿ കി කි ཨི ཀི
ī की কী ਕੀ કી କୀ கீ కీ ಕೀ കീ කී    
u u कु কু ਕੁ કુ କୁ கு కు ಕು കു කු ཨུ ཀུ
ū कू কূ ਕੂ કૂ କୂ கூ కూ ಕೂ കൂ කූ    
e e कॆ                 கெ కె ಕೆ കെ කෙ    
ē के কে ਕੇ કે କେ கே కే ಕೇ കേ කේ ཨེ ཀེ
ai ai कै কৈ ਕੈ કૈ କୈ கை కై ಕೈ കൈ කෛ    
o o कॊ                 கொ కొ ಕೊ കൊ කො    
ō को কো ਕੋ કો କୋ கோ కో ಕೋ കോ කෝ ཨོ ཀོ
au au कौ কৌ ਕੌ કૌ କୌ கௌ కౌ ಕೌ കൗ කෞ    
ɻ̣ कृ কৃ     કૃ କୃ     కృ ಕೃ കൃ කෘ    
ɻ̣ː कॄ কৄ     કૄ               කෲ    
ɭ̣ कॢ কৢ               కౄ   ക്ഌ (ඏ)[1]      
ɭ̣ː कॣ কৣ                   ക്ൡ (ඐ)      

எண்கள்

எண் தேவநாகரி கிழக்கு நாகரி குர்முகி குஜராத்தி ஒரியா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் திபெத்தியம்
0
1
2
3
4
5
6
7
8
9

யூனிகோடில் உள்ள பிராமிய எழுத்துமுறைகள்

 
கன்ஹேரி குகை பிராமி எழுத்துக்கள்

பிற பிராமி எழுத்துமுறைகள்

பிராமி போன்ற எழுத்துமுறை

குறிப்புகள்

  1. Only ancient written Sinhala

இவற்றையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராமிய_குடும்பம்&oldid=3766124" இலிருந்து மீள்விக்கப்பட்டது