யோக்மயா நியூபனே
யோக்மயா நியூபனே ( Yogmaya Neupane) (1867-1941) என்பவர் ஒரு மதத் தலைவரும், பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர் நேபாளத்தின் போஜ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். [1] யோக்மயா நேபாளத்தின் முன்னோடி பெண் கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது ஒரே வெளியிடப்பட்ட கவிதை நூலான சர்வார்த்த யோக்பானி [2] என்பது இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாக கருதப்படுகிறது.
யோக்மயா நியூபனே | |
---|---|
योगमाया न्यौपाने | |
2017இல் பெயர் தெரியாத ஒரு கலைஞரால் வரையப்பட்ட ஓவியம் | |
தாய்மொழியில் பெயர் | योगमाया न्यौपाने |
பிறப்பு | 1867 மஜுவாபேசி, நேபாளதாதா, போஜ்பூர் நேபாளம் |
இறப்பு | 5 சூலை 1941 அருண் ஆறு, போஜ்பூர், நேபாளம் | (அகவை 74)
ஆரம்பகால வாழ்க்கை (1867-1872)
தொகுயோக்மயா 1867இல் கிழக்கு நேபாளத்தின் கோசி மண்டலத்தில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாளந்தா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பெற்றோர்களான தந்தை சிறீலால் உபாத்யா நியூபனே மற்றும் தாய் சந்திரகலா நியூபனே ஆகியோருக்கு மூன்று குழந்தைகளில் மூத்த குழந்தையாகவும், ஒரே மகளாகவும் பிறந்தார். [3]
குடும்பம்
தொகுஅந்தக் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த பிராமண பழக்கவழக்கங்களின்படி, யோக்மயா தனது பெற்றோரால் மனோரத் கொய்ராலா என்ற சிறுவனுடன் திருமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு 7 வயது. இருப்பினும், இவர் தனது மாமியாருடன் தங்கியிருந்த காலம் முழுவதும், மிகவும் துன்பப்பட்டதாக நம்பப்படுகிறது. தனது பதின்வயதிலேயே, யோக்மயா வீட்டிலிருந்து தப்பி தனது தாய் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார். இருப்பினும், யோக்மாயாவை இவரது தந்தை மற்றும் இவரது சமூகத்தினர் வீட்டில் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்கு பதிலாக அவர்கள் மாமியாரிடம் திரும்புமாறு இவரை வலியுறுத்தினர். ஆனால், மாமியார் இவரை மீண்டும் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், இவருடைய தந்தை தயக்கத்துடன் இவரை தனது வீட்டில் தங்க அனுமதிக்க முடிவு செய்தார்.
பணிகள்
தொகுயோக்மயாவின் கவிதைகள் நேபாளத்தை ராணா வம்சம் ஆட்சி செய்த காலத்திலும், பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்ட காலத்திலும் எழுதப்பட்டுள்ளது. அக்கால கலாச்சார மற்றும் அரசியல் அடக்குமுறையால் வகைப்படுத்தப்பட்ட இவரது பாணி முற்றிலும் அசல் மற்றும் தைரியமாக வெளிப்படையாக இருந்தது. ஒரு மதத் தலைவராக இந்து மதச் சூழலில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்திய போதிலும், இவரது கவிதைகள் மற்றும் செயல்பாட்டு கருப்பொருள்கள் இப்பகுதியில் பெண் மற்றும் சிறுபான்மை உரிமைகள் மீது பெரிதும் சுழன்றன, இது அந்த நேரத்தில் ஏராளமான மக்களைக் கவர்ந்தது. இவரது பிற்காலத்தில், இவரது நடவடிக்கைகள் அரசாங்கத்தால் பெரிதும் கண்காணிக்கப்பட்டன. மேலும் இவரது பணிகள் ராணா ஆட்சியாளர்களின் கட்டளையின் கீழ் அதிகாரிகளால் தடை செய்யப்பட்டன. மேலும் இவரும், இவரது குழுவும்ர் துன்புறுத்தப்பட்ட போதிலும், நேபாளத்தில் கிழக்கு நேபாளத்தில் அவரது பிறந்த இடத்தை சுற்றி தங்குவதைத் தேர்ந்தெடுத்து தனது கடைசி நாட்களைக் கழித்ததில் குறிப்பிடத்தக்கவர். 1920ஆம் ஆண்டில் நேபாளத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டதன் பின்னணியில் முக்கியமாக கருதப்பட்ட நேபாள பெண்களின் முதல் அமைப்பான நாரி சமிதி எனற அமைப்பு 1918இல் யோக்மயாவால் நிறுவப்பட்டது என்றும் கருதப்படுகிறது. [4]
இறப்பு
தொகுஇவர் துறவு மேற்கொண்டதாக அறிவித்து நேபாளத்திற்கு திரும்பிய பின்னர் யோக்மயாவின் செயல்பாடு தொடங்கியது. அதிகாரிகள் யோக்மாயா மற்றும் இவரது ஆதரவாளர்கள் குழு மீது கடுமையாக இருந்ததோடு, நிர்வாகத்திற்கான அவர்களின் மிருகத்தனமான மற்றும் ஊழல் அணுகுமுறையை சீர்திருத்த விரும்பாத நிலையில், யோக்மாயாவும் இவரது 67 சீடர்களும் நேபாளி வரலாற்றில் மிகப் பெரிய வெகுஜன தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 1941இல் அருண் ஆற்றில் மூழ்கி இறந்தனர். [5] 2016 சனவரியில், நேபாள அரசு இவரது பங்களிப்புகளை அங்கீகரித்து ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Bhandari, Lekhnath (2013-07-13). "Courageous Reformer "साहसी सुधारक"". http://epaper-archive.ekantipur.com/kantipur/showtext_ajax.aspx?boxid=1335921&parentid=32068&issuedate=1372013.
- ↑ Nadeau, Kathleen M.; Rayamajhi, Sangita (2013-06-11). Women's Roles in Asia (in ஆங்கிலம்). ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313397493.
- ↑ Bhandari, Lekhnath (2013-07-13). "Courageous Reformer "साहसी सुधारक"". Article in Ekantipur. http://epaper-archive.ekantipur.com/kantipur/showtext_ajax.aspx?boxid=1335921&parentid=32068&issuedate=1372013.
- ↑ "In focus: Yogmaya, who gave her life fighting Rana atrocities". kathmandupost.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.
- ↑ Women Participation In Nepali Labour Movement.