அருண் ஆறு (சீனா - நேபாளம்)
அருண் ஆறு (Arun River (நேபாளி: अरुण नदी); நேபாளத்தில் அமைந்துள்ள கோசி அல்லது சப்த கோசி ஆற்றின் ஒரு பகுதியான இது, எல்லை கடந்து பாயும் ஆறாகும். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உருவாகும் இந்த அருண் ஆற்றை, அப்பகுதியில் புங் சு அல்லது பம்-சு (Phung Chu or Bum-chu) என அழைக்கப்படுகிறது.[1]
அருண் ஆறு Arun (பும் - சு Bum-chu) | |
River | |
நேபாளத்தின் லெகுவா (VDC) இலிருந்து அருண் ஆற்றின் காட்சி.
| |
நாடுகள் | நேபாளம், சீனா |
---|---|
மாநிலம் | திபெத் |
கிளையாறுகள் | |
- இடம் | யெரு சன்போ, ட்ரக்கார் - சு |
- வலம் | பாருன் ஆறு |
உற்பத்தியாகும் இடம் | குத்சோ Gutso |
கழிமுகம் | சப்த கோசி அமைப்பதற்காக சன் கோசி மற்றும் தமூர் ஆறு ஆகியவற்றுடன் சங்கமிக்கிறது. |
- அமைவிடம் | திரிவேணி, நேபாளம், நேபாளம் |
பெயர்
தொகுதிபெத்தில் இந்த ஆற்றை "பம் - சு" (Bum-chu) என அழைக்கப்படுகிறது, இது புங் சு (Phung Chu) அல்லது சீன மொழியிலிருந்து "பெங் குவா", அல்லது (Peng Qu or Pumqu) பும்குவிலிருந்து ஒலிபெயர்ப்பு செய்யப்படுகிறது.[2][3] சீனாவிற்குள் உள்ள உலகின் 14 ஆவது உயரமான சிசாபங்மா பனிமலைப் பகுதியிலிருந்து வரும் "மென் கியுன்" அல்லது "மொய்ன்க்யுன்" (Men Qu or Moinqu) எனும் உயர்ந்த உப ஆறாக வரும் இது, நேபாளத்திற்கு வந்தவுடன் அருண் ஆறாக பெயர்மாற்றம் பெறுகிறது.[4]
திபெத்
தொகுதிபெத்தியப் பெயரான பும்-சு (Bum-chu), ஒரு பானையில் உள்ள நீர் அளவிலிருந்து, வரும் ஆண்டின் தெய்வீக அல்லது புனிதமான, எதிர்பார்ப்புகளுக்கு முயற்சிக்கும் ஒரு சமய விழாவைக் குறிக்கிறது, சு "chu" என்பது "நீர்" என்ற திபெத்திய வார்த்தையாகும்.[5] திபெத்தியிலுள்ள நிலாம் மாகாணத்தில் (Nyalam County) உள்ள குட்சோ (Gutso) அருகே உருவாகும் இந்த மென் - சு ஆறு (Men-chu) சுமார் 17 கிலோமீட்டர் (11 மைல்) கீழ்நோக்கி சென்று இணைகிறது. திங்ரி மாகாணத்தின்(Tingri county) மேல் பகுதிகளை அடைந்து ஆக்கிரமித்த பம்-கு, பக்கவாட்டு பள்ளத்தாக்கில், அதன் துணை ஆறுகளை உருவாக்கப்படுகிறது. இதில் முதன்மையானது லோலோ-சு (Lolo-chu), ஷெல்-சு (Shel-chu), ராங்க்பூ-சு (Rongpu-chu), ட்ராகர்-சு (Trakar-chu), கர்தா-சு (Kharda-chu), ரா-சு சாங்போ (Ra-chu Tsangpo), மற்றும் லாங்க்கார் க்யூ-சு (Langkor Gya-chu).[6] அருண் ஆறு எனப்படும் இந்த பம் - சு ஆற்றை சந்திக்கக்கூடிய மற்றொரு ஆறு, ட்ராகர் - சு ஆறு ஆகும். மேலும் கர்தா (Kharda) நகரத்தை கடந்த செல்லும் இந்த ஆறு, எவரெசுட்டுவின் கிழக்கு முகத்திலுள்ள "காங்க்ஜங்" (Khangzhung) என்னுமிடத்தை நுழைவாயிலாக கொண்டுள்ளது. நேபாளத்தின் மக்காலு மற்றும் கஞ்சஞ்சங்கா மலைப் பகுதிகளுக்கு நடுவே நேரடியாக இமயமலைகளின் முக்கிய சங்கிலியால் திரட்டப்பட்டிருக்கும் அதன் சக்தி, அதன் தெற்கேந்திராவின் தெற்கே செல்கிறது. மேலும் இந்த ஆற்றின் உயரம் சுமார் 3,500 மீட்டர் (11,500 அடி) எல்லை வரை இருப்பதால், மக்காலு மற்றும் கஞ்சஞ்சங்கா மலை என இரண்டும் சுமார் 8,500 மீட்டர் (27,900 அடி), பள்ளத்தாக்கில் உள்ளது. இது உலகின் ஆழமான ஒன்றாக சுமார் 5,000 மீட்டர் (16,000 அடி) ஆழத்தில் உள்ளது.[7]
கோசி ஆறு அமைப்பு
தொகுகங்கை ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறான, கோசி, அல்லது சப்த கோசி எனும் ஆறு கிழக்கு நேபாளத்தின் வடிகாலாக உள்ளது. மேலும் இந்த ஆறு மத்தியகிழக்கு நேபாளத்தில் ஒன்றாக இணைந்து ஏழு ஆறுகள் இருப்பதால் சப்த கோசி எனப்படுகிறது.(சப்த என்ற வடமொழி சொல்லுக்கு, தமிழில் ஏழு என்று பொருள்)[8]
சான்றுகள்
தொகு- ↑ "Arun River, China-Nepal". vedinternational.forumne.net (ஆங்கிலம்) - Aug 23, 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-11-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Gyurme Dorje (1999). Tibet Handbook. Bath, England: Footprint Handbooks. பார்க்கப்பட்ட நாள் 2011-05-27.
- ↑ Morris, captain C.J. (September 1923). "The Gorge of the Arun". The Geographical Journal 62: 161–168. doi:10.2307/1780654. https://archive.org/details/sim_geographical-journal_1923-09_62_3/page/161.
- ↑ ARUN RIVER, CHINA-NEPAL - Article Id: WHEBN0005778236
- ↑ Tibetan language - page: 7
- ↑ ARUN RIVER, CHINA-NEPAL[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Arun River, China-Nepal
- ↑ "SUN KHOSI RIVER RAFTING". Archived from the original on 2017-11-12. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.