சிசாபங்மா

சிசபங்மா உலகின் 14 ஆவது உயரமான மலையும், எண்ணாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தைக் கொண்ட மலைகளுள் உயரம் குறைந்ததும் ஆகும். இது 8013 மீட்டர் (26,289 அடிகள்) உயரம் கொண்டது. இது முழுதாகவே சீனாவுக்குள் இருப்பதும், 1950 களிலும் அதற்குப் பின்னரும் இப் பகுதிக்குள் செல்வதற்குச் சீனா தடை விதித்திருந்ததாலும், வெளிநாட்டவர்கள் இதில் ஏறும் முயற்சியில் இறங்க முடியாதிருந்தது. இதனால் எண்ணாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்ட மலைகளுள், உச்சியை அடைவதில் கடைசியாக வெற்றிபெற்ற மலையும் இதுவே.

Shishapangma
Shishapangma.jpg
Shishapangma (left) from mountain flight, Nepal
உயர்ந்த இடம்
உயரம்8,027 m (26,335 ft)[1][2][3][4]
Ranked 14th
இடவியல் புடைப்பு2,897 m (9,505 ft)[5]
Ranked 111th
இடவியல் தனிமை91 km (57 mi) Edit on Wikidata
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
அமைவிடம்Nyalam County, Tibet, China
மூலத் தொடர்Jugal/Langtang Himal, இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்2 May 1964 by Xǔ Jìng et al. (Chinese)
(First winter ascent 14 January 2005 Piotr Morawski and Simone Moro)
எளிய அணுகு வழிsnow/ice climb

திபேத்திய மொழியில் இதன் பெயர் "புல் சமவெளிகளுக்கு மேலுள்ள உச்சி" என்னும் பொருள் தருவது. இம் மலை தென்-நடுத் திபேத்தில், நேபாளத்துடனான எல்லையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 8,000 மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரம் கொண்ட மலைகளுள் முழுவதுமாகச் சீனாவுக்குள் இருக்கும் மலை இது மட்டுமே.

இவற்றையும் பார்க்கவும்தொகு

குறிப்புகள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; peakbagger என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; dili360 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 8000ers2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; summitpost என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. 2014-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Shisha Pangma on Peakware". 2 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 March 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசாபங்மா&oldid=3553859" இருந்து மீள்விக்கப்பட்டது