யோசப் மைசிட்டர்
யோசப் மைசிட்டர் (Joseph Meister, பிப்ரவரி 21, 1876 - சூன் 16, 1940) என்பவர், 1885ஆம் ஆண்டு இவர் ஒன்பது வயது சிறுவனாக இருந்த பொழுது வெறி நாயால் கடிபட்டபின் பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்ய அனுமதித்தார். பாஸ்டர் கண்டுபிடித்த மருந்து இவரது வெறிநாய்க் கடி நோயை குணப்படுத்தி சோதனையை வெற்றிகரமாக முடிந்தது. லூயி பாஸ்டர் வெறி நாயில் இருந்து எடுக்கப்பட்ட தீநுண்மத்தை முயலின் உடலில் செலுத்தி, பின் அத்தீநுண்மத்தை முயலின் உடலில் இருந்து எடுத்து உலர்த்தி அதன் நோய் ஏற்படுத்தும் பண்பை செயலிழக்கச் செய்தார். இது பின்னர் வெறிநாய்க் கடி நோயைப் போக்கும் மருந்தானது.
மைசிட்டர் தனது அறுபதாம் அகவை வரை பாஸ்டர் நிறுவனத்திலேயே பாதுகாவலராக பணிபுரிந்தார்.
உசாத்துணை
தொகு- Gerald L. Geison. The Private Science of Louis Pasteur (Princeton University Press, 1995) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-03442-7)