யோசாங்
யோசாங் என்பது மணிப்பூரில் வசந்த காலத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது மணிப்பூரிகள் கடைபிடிக்கும் லம்டா மாதத்தின் பௌர்ணமி நாளில் (பிப்ரவரி/மார்ச்) தொடங்கி தொடங்குகிறது. யோசாங் என்பது மெய்தி மக்களின் பூர்வீக மரபுகளாகும். இது மணிப்பூரில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. ஹோலியைப் போலவே, மணிப்பூரின் மெய்தி மக்கள் இந்த விழாவின் போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர்.
விளக்கம்
தொகுமணிபூரின் ஒவ்வொரு கிராமத்திலும் சூரியன் மறைவுக்குப் பிறகு யோசாங் விழா தொடங்குகிறது. அப்போது தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வைக்கோல் குடிசை எரிக்கப்படும். பின்னர் குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நகாதெங் என்று அழைக்கப்படும் பண நன்கொடைகளை கேட்பார்கள். இரண்டாவது நாளில், மணிப்பூரின் கிழக்கு மாவட்டமான இம்பாலிலுள்ள கோவிந்தகி கோயிலில் உள்ளூர் குழுக்கள் கீர்த்தனைகளை நிகழ்த்துகின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில், பெண்கள் தங்கள் உறவினர்களிடம் நகாதெங் பெறுவதற்காகச் சென்று பணம் சேகரிப்பதற்காக கயிறுகளால் சாலைகளைத் தடுக்கிறார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில், மக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீரை தெளித்துக் கொள்வார்கள். இந்த நிகழ்வில் கயிறு இழுத்தல், கால்பந்து விளையாட்டு, முக்னா (மல்யுத்தம்) போன்ற பல விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பகின்றன. இது தவிர திருவிழாவின் போது உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டில் சமைத்த உணவுகள் அண்டைவீட்டாருடன் பகிர்ந்து கொள்கின்றனர். [1]
நடனம்
தொகுஇந்தத் திருவிழாவின் மற்றொரு அம்சம் தபல் சோங்பா (நிலவொளியில் நடனம்) என்ற நடன வடிவமாகும். பல்வேறு இடங்களிலிருந்து ஆண்கள் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வந்து பெண்களின் கைகளைப் பிடித்தபடி வட்டமாக நடனமாடுவார்கள். 2016 இல், இது மார்ச் 23–24 வரை நிகழ்ந்தது. [2]
கொண்டாட்டங்கள்
தொகுஇந்த மகிழ்ச்சியான திருவிழாவைக் கொண்டாட உள்ளூர்வாசிகளும் ஈடுபடுகிறார்கள். அவர்கள தங்கள் வீட்டில் சமைக்கும் உணவை பிறருக்கு அளிப்பார்கள். தற்காலத்தில், அடிமட்டத்தில் திறமைகளைக் கண்டறிய பண்டிகை ஆற்றலை விளையாட்டு நிகழ்வுகளை நோக்கி அனுப்பும் போக்கு உள்ளது. இது மெய்தி மக்களின் பணக்கார விளையாட்டு மனப்பான்மைக்கு ஏற்ப உள்ளது . [3]
முக்னா
தொகுமுக்னா எனப்படும் மல்யுத்தத்தையும் இந்தத் திருவிழாவில் நடத்துகிறார்கள். இது சடங்கு செயல்பாடுகளின் உள்ளார்ந்த பகுதியாகும். ஒருவருக்கொருவர் 'நிங்ரி' எனப்படும் இடுப்புப் பட்டைகளை வைத்திருப்பதன் மூலம் போட்டிகள் தொடங்குகின்றன. எதிராளியின் முதுகில் தரையில் தொட வைப்பதன் மூலம் வெற்றி பெற்றதாக கருதப்படும். வெற்றியாளர் "யாத்ரா" என்று அழைக்கப்படுகிறார். [3] முக்னாவில் பல நுட்பங்கள் உள்ளன. இதை விளையாட முழுமையான உடல் தகுதி இருக்க வேண்டும், மேலும், தேர்ச்சியும் பெற வேண்டும். [2] எதிராளியின் கழுத்து, முடி, காது அல்லது கால்களை கைகளால் பிடிப்பது அனுமதிக்கப்படாது. எந்த தவறான பிடிகளும் தவறானவை என்று கருதப்படுகின்றன. கால்களைத் தவிர உடலின் எந்தப் பகுதியையும் தரையில் தொடும் எவரும் தோல்வியுற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
எடைக்கேற்ப மல்யுத்த வீரர்கள் வகைப்படுத்தப் படுகின்றனர். பாரம்பரிய உடையானது வீரர்களுக்கு முக்கிய புள்ளிகளைப் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மல்யுத்த வீரர் அடங்கிய பானா அல்லது யெக் ஆகியவற்றை அடையாளம் காணவும் உதவுகிறது.
புகைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Yaoshang festival". tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.
- ↑ http://manipur.gov.in/wp-content/uploads/2013/02/general_holiday_2016.pdf
- ↑ "five-day-yaoshang-festival-begins-in-manipur". easternmirrornagaland.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.
- Sanajaoba, Naorem (1988). Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization, Volume 4. New Delhi: Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170998532.