யோசெப் கிளெதில்

யோசெப் கிளெதில் (Joseph Gledhill, ஜோசப் கிளெட்ஹில்; 17 நவம்பர் 1837 – 20 மார்ச்சு 1906) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் இங்கிலாந்தின், மேற்கு யார்க்சயரில் உள்ல காலிபாக்சில் அமைந்த பெர்மெர்சைடு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார்.[1]

இவர் 1879 இல் இரட்டை விண்மீன்களின் கையேடு எனும் நூலை எடுவார்டு கிராசுலே, அருள்திரு ஜேம்சு வில்சன் ஆகியோருடன் இணைந்து எழுதினார் (ஜேம்சு வில்சன் பிறகு வோர்செசுட்டரின் நெறித்தந்தை ஆனார்). இவர் 1865 நவம்பர் 15 இல் அரசு வானிலையியல் கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 1874 மே 8 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆனார்.[3]

செவ்வாயின் மொத்தல் பள்ளமொன்று இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. MNRAS 67 (1907) 232 ஜோசப் கிளெட்ஹில் நினைவேந்தல்
  2. "Fellows list, Royal Meteorological Society 1900" (PDF).
  3. "1907MNRAS..67R.232. Page 232". adsabs.harvard.edu. 2021-08-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசெப்_கிளெதில்&oldid=3494562" இருந்து மீள்விக்கப்பட்டது