யோஸ்கட் மாகாணம்

யோஸ்கட் மாகாணம் (Yozgat Province, துருக்கியம்: Yozgat ili ) என்பது துருக்கியியில் உள்ள என்பத்தோரு மாகாணங்களில் ஒரு மாகாணம் ஆகும். இது மத்திய துருக்கியில் அமைந்து உள்ளது. அதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் கோரம் மாகாணம், மேற்கில் கோர்கலே மாகாணம், தென்மேற்கில் கரேஹிர் மாகாணம், தெற்கே நெவஹிர் மாகாணம், தென்கிழக்கில் கெய்சேரி மாகாணம், கிழக்கில் சிவாஸ் மாகாணம், வடகிழக்கில் டோகாட் மாகாணம் மற்றும் வடக்கே அமஸ்யா மாகாணம் ஆகியவை சூழ்ந்து உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமாக யோஸ்கட் நகரம் உள்ளது.

யோஸ்கட் மாகாணம்
Yozgat ili
துருக்கியின் மாகாணம்
Location of Yozgat Province in Turkey
Location of Yozgat Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்Central Anatolia
SubregionKayseri
அரசு
 • Electoral districtYozgat
பரப்பளவு
 • மொத்தம்14,123 km2 (5,453 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்4,24,981
 • அடர்த்தி30/km2 (78/sq mi)
தொலைபேசி குறியீடு0354
வாகனப் பதிவு66

மாவட்டங்கள் தொகு

யோஸ்கட் மாகாணமானது 14 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சொற்பிறப்பு தொகு

நகரின் அசல் பெயர் "போசோக்", என்பதாகும் பின்னர் இந்த பெயர் யோஸ்கட் மாகாணம் என மாற்றப்பட்டது. யோஸ்கட் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டாலும் இப்பகுதி "போசோக்" என்று குறிப்பிடப்பட்டது. "யோஸ்கட்" என்ற பெயர் எப்படி வந்தது என்ற பெயர் தோற்றம் குறித்த கருத்துகளானது சர்ச்சைக்குரியதாக உள்ளது. இது குறித்து வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு நம்பிக்கையின் படி, யோஸ்கட் தரையின் அடுக்குகள் அதாவது நகரத்தின் தரைப் பகுதியானது தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால், முதலில் உயரமானது "நூறு மடங்கு" உயர்வு மற்றும் உயரம் பல மடங்கு என்று அழைக்கப்பட்டது. "யோஸ்கட்" என்ற பெயர் வைக்கப்பட்டது குறித்து மக்கள் மத்தியியல் இருந்த முனுமுனுப்பு மாறிவிட்டது.

வரலாறு தொகு

யோஸ்காட் 5000 ஆண்டுகளின் வரலாற்றைக் கொண்டிருக்கலாம் எனப்படுகிறது. மாநிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் யோஸ்கட் உள்ளிட்ன முதல் அரசியல் ஒன்றியத்தை இட்டைட்டுகள் பேரரசால் நிறுவப்பட்டது. இட்டைட்டு பேரரசானது, இன்றைய யோஸ்கட் பண்டைய நகரமான ஹட்டுசாவில் நிறுவப்பட்ட பேரரசின் எல்லைக்குள் அமைந்திருந்தது.

நிலவியல் தொகு

இந்த மாகாணமானது மத்திய அனடோலியா பிராந்தியத்தில் சிவப்பு ஆற்றின் பகுதியில் போசோக்கின் பீடபூமியில் அமைந்துள்ளது. சாம்சூன்-அங்காரா-சிவாஸ் நெடுஞ்சாலை மற்றும் கெய்சேரி மற்றும் மெர்சின் நெடுஞ்சாலைகள் யோஸ்கட் வழியாக செல்கின்றன. துருக்கி நாட்டிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகள் வரை வர்த்தகம் செய்யப் பயன்படும் இந்த பாதையின் முக்கியத்துவமானது மேலும் மேலும் அதிகரித்துவருகிறது. வீழ்த்தப் பரப்பு 13,597 கிமீ ² அதேநேரம், உண்மையான பரப்பளவு 14,123 கிமீ ² ஆகும். இந்த மாகாணத்தைப் பொறுத்தவரை பொதுவாக அதிகமான மலைப்பிரதேசம் இல்லை.

கல்வி தொகு

மாகாணத்தில், இளங்கலை பட்டப் படிப்பு வழங்கும் போசோக் பல்கலைக்கழகம் உள்ளது. இது தவிர, அனாடோலியன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை மற்றும் அனடோலியன் உயர்நிலைப்பள்ளிகள், அறிவியல் உயர்நிலைப்பள்ளி மற்றும் யோஸ்கட் மாகாண யோஸ்கட் தொழிற்கல்வி உயர்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிலையங்கள் உள்ளன.

பொருளாதாரம் தொகு

இந்த மாகாணத்தில் உணவு பதப்படுத்துதல், ஆடை, உலோக உதிரிபாகங்கள் தயாரித்தல், செங்கற்கள் மற்றும் உடனடி கான்கிரீட் கலப்பு உற்பத்தி ஆகியவை இங்கு உள்ள முக்கிய தொழில்கள் ஆகும்.

விவசாயம் தொகு

யோஸ்காட் மாகாணத்தின் பொருளாதாரமானது பெரும்பாலும் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு விளைவிக்கப்படும் பொருட்களில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மிகுதியாக உள்ளன. அதே நேரத்தில் பாசன வசதிமிக்கப் பகுதிகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சூரியகாந்தி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயக்-குடும்ப பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. பிராந்தியங்களுக்கிடையில் பழ உற்பத்தியில் கடேஹர் மாவட்டம் பெரும் முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் உற்பத்திக்கு தேவேசி வடிநிலமானது ஒரு சிறந்த பகுதியாக உள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோஸ்கட்_மாகாணம்&oldid=2868436" இலிருந்து மீள்விக்கப்பட்டது