யோ. திருவள்ளுவர்
தமிழ் எழுத்தாளர்
யோ. திருவள்ளுவர் உலக விவகாரங்கள் குறித்தும், உரிமைக்காகப் போராடுபவர்கள் குறித்தும் ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்சமயம் தொழில் நிமித்தமாக பெல்யியத்தில் வாழ்கிறார். 20 ஆண்டுகளாக ஈழம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
யோ. திருவள்ளுவர் | |
---|---|
பிறப்பு | சூலை 22 |
வலைத்தளம் | |
http://www.thiruvalluvar.in/ |
வாழ்க்கைக்குறிப்பு
தொகுஇவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகே உள்ள மணலிக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
எழுத்து
தொகுஇவரது புலம் பெயர் தொழிலாளர் பற்றிய சோகக்கதைகளைக் கொண்ட "திரை கடலோடியும் துயரம் தேடு" நூல் குறிப்பிடும்படியாக வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
செயற்பாடுகள்
தொகு1987 இல் இருந்து கூடங்குளம் அணு உலைக்கான எதிர்ப்பு, அனைவருக்கும் வேலை உத்தரவாதம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.
வெளி வந்த நூல்கள்
தொகு- திரை கடலோடியும் துயரம் தேடு (ஆழி வெளியீடு)
- ஈழம், இனப்படுகொலைகளுக்குப் பின்னால்