ரசலின் தேனீர் கேத்தல்

ரசலின் தேனீர் கேத்தல் (Russell's teapot) இறைமறுப்புக் கொள்கையை விளக்கும் ஒர் உவமை ஆகும். இந்த உவமை பெர்ட்ரண் ரசலால் முதலில் எடுத்தாளப்பட்டது. இந்த உவமை கடவுள் உள்ளாரென நிரூபிக்கும் நிர்ப்பந்தம் நம்பிக்கையாளரிடமே உள்ளது என்பதை விளக்க உதவுகிறது. அந்த உவமை பின்வருமாறு:

கோள்களைப் போல சூரியனைச் ஒரு தேனீர் கேத்தல் சுற்றுகின்றது, அதுவும் மிகச் சிறிய அல்லது மாயமான கேத்தல், உயர் ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளால் பார்க்க முடியாத ஒரு தேனீர் கேத்தல் இவ்வாறு சுற்றுகின்றது என்று ஒருவர் கூறிகிறார். இந்த கூற்றை பிழையென நிரூபிக்க முடியாது, அதனால் இந்த கூற்று சரியென அவர் வாதிடுகிறார். இதுதான் உவமை. அதாவது மேற்கூறியபடி இல்லை என்று நிரூபிக்க முடியாத ஒரு கேத்தல் வானில் சுற்றுகின்றது என்று வாதிடுவது முட்டாள்தனம்.[1] இதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு. எனவே ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய கடமை கேத்தல் வானில் சுற்றுகின்றது என்று வாதிடுபவைரையே சாரும். மனித கருவிகளுக்கு அப்பாற்பட்டதாக இறை ஒன்று உள்ளது என்று எவராவது வாதிடுவார்களாயின், அது இருக்கிறதென்று நிரூபிப்பது அவர்களது கடமை என்பது இந்த உவமையின் நீட்சி ஆகும்.

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. - பெர்ட்ரண்ட் ரஸ்சல்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசலின்_தேனீர்_கேத்தல்&oldid=2830577" இலிருந்து மீள்விக்கப்பட்டது